Educational Welfare.

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

அல் அமின் வரலாற்றில் 8 அறிய சாதனைகள்:-....

 தற்போது இருக்கும் நிர்வாகம் 10/04/2024 அன்று பொறுப்பேற்று 02/12/2024 இன்று வரை 8 மாதங்களை தாண்டியுள்ள நிலையில் எட்டாத 8 சாதனைகளை செய்து அசத்தியுள்ளதை தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது...


1. முன்பெல்லாம் அல் அமின் மீட்டிங் என்று பெயரிடப்பட்டு அழைப்பு கொடுத்து வந்த நிலையில் தற்போது உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி என்று அழகிய பெயரிடப்பட்டு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது அல் அமின் வரலாற்றில் அறிய சாதனையாக கணிக்கப்படுகிறது.

2. முன்பெல்லாம் அல் அமின் மொத்த உறுபினர்களே 45 நபர்களாக இருந்தார்கள். புதிய நிர்வாகம் வந்ததும் எல்லோரையும் ஒன்றினைக்கும் பணியில் ஈடுபட்டு அல் அமின் மொத்த உறுபினர்கள் 75 நபர்களாக உயர்த்தி அனைவரையும் ஒன்றினைக்கும் பொருட்டு வாட்சப் குழு ஒன்று ஆரம்பித்து அதில் எல்லோரையும் ஒன்றுமைபடுத்தியது அல் அமின் வரலாற்றில் அறிய சாதனையாக கணிக்கப்படுகிறது.

3. நிழுவையில் விட்டுப்போயிருந்த‌ நிகாஹ் அன்பளிப்பு பரிசை மீண்டும் துவங்கி இதுவரை 4 உறுப்பினர்களுக்கு எவ்வித குறையுமின்றி நம் சபையினுடைய முறைப்படி நம் சபை சார்பாக மணமக்களை வாழ்த்தி 💐💐  நிகாஹ் அன்பளிப்பு பரிசை வழங்கப்பட்டது. இதுவும் அல் அமின் வரலாற்றில் புதுபிப்பு சாதனையாக கணிக்கப்படுகிறது.

4. தற்போது இருக்கும் நிர்வாகம் 10/04/2024 அன்று பொறுப்பேற்று 02/12/2024 இன்று வரை 8 மாதங்களை தாண்டியுள்ள நிலையில் ஐந்து உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டு இருக்கிறது. மூன்று மாதங்களில் விடுபட்ட காரணம் கடினமான வெப்ப சூழ்நிலையையும், கடினமான வேலைப்பளுவின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது ,

5. 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான நமது சபைக்கு உட்பட்ட வசதிகுன்றிய மாணவர்களை கண்டறிந்து கல்வி ஊக்கத்தொகையை இதுவரை 5 மாணக்கர்களுக்கு எவ்வித தடையுமின்றி, தெய்வின்றி நமது சமுதாய உறவுகளை  மேம்படுத்தி வருகின்றது .

6. நமது உறுப்பினர்களில் யாரேனும் உம்ரா பயணம் செய்வதாக நிர்வாக குழுவிற்க்கு தெரிவித்தால் அவர்களை நம் சபை சார்பாக கண்ணியப்படுத்தும் பொருட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி தக்பீர் கூறி நல்ல முறையில் வழியனுப்பப்ப‌டுகிறது.

7. ஒவ்வொரு மாத இறுதியிலும் வெளியிடப்படக்கூடிய [The work statement ] மாதாந்திர செயல்திட்ட வடிவம் அல் அமின் வரலாற்றில் மிகப் பெரும் தனித் திறன் சாதனையாக கணிக்கப்படுகிறது.

8. காலத்திற்கு தகுந்தார் போல அவ்வபோது  அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆக்கள், அயலக தமிழர் நல வாரிய செய்தி, அமிரக செய்திகள், பொது மன்னிப்பு* [Amnesty for UAE visa holders]  செய்தி,  வரலாறு கண்டிராத வயநாடு மக்களுக்காக செய்தி:-, திருமண வாழ்த்து செய்தி, சுற்றறிக்கை செய்தி [Circulaire Notice], வபாத் செய்தி:‍ அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் عَاشُورَاءَ ஆஷுராவுடைய சுன்னத்தான நோன்பு செய்தி. அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள‌ மாணாக்கர்களை ஊக்கப்படுத்துதல் செய்தி, இலவச கல்வி உரிமை RTE எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் விழிபுணர்வு செய்தி, இன்னும் இது போன்ற பல செய்திகளை அவ்வப்போது நம்மளுக்கு கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறது.

9. முகநூல் மற்றும் இணையதளம் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு அதிலும் தனித்திறமையாற்றி முன்னோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் அல் அமின் வரலாற்றில் புதுபிப்பு சாதனையாக கணிக்கப்படுகிறது.

இப்படிக்கு:-
 செயலர்
Share:

உம்ரா பயணம் சிறக்க துஆச் செய்வோம் வாருங்கள்...

~ 📚 பிஸ்மில்லாஹ் : 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

*Subject:* _உம்ரா பயணம் சிறக்க துஆச் செய்வோம் வாருங்கள்..._

✍ . அன்பிற்குரிய உறவுகளே!! நேற்று நடந்த கோலாகல உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்றன‌. அப்போது நம் சபையின் உறுப்பினர் ஜனாப் S.செய்யது முஹம்மது பட்டானி (வாசுதேவநல்லூர்) அவர்கள் நாளை 04/12/2024 உம்ரா பயணம் செய்வதாக நம் சபையோரின் முன்னிலையில் தெரியப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் உம்ரா பயணம் சிறக்கவும், அவர்களுடைய அமல்களை லேசான முறையில் செய்யவும், அவர்களுடைய உம்ரா கபூலியத்தாகுவதற்கும் நம் சபையோர் எல்லோரும் இச்செய்தியின் மூலம் அவர்களுக்கு துஆச் செய்து கொள்கிறோம்.. 

_அவர்கள் நம்மிடம் தெரிவித்துக் கொண்ட செய்தியாவது:-_

I intend to visit the holy Mecca & Medina to perform Umrah, and we are leaving on December 04, 2024. I am all excited to visit the house of Allah (SWT) for the First time, Insha'Allah. May Allah help.

I request you all to kindly pray for me and my family for Allah to accept our Umrah & our prayers and to give us the strength and to fill our hearts with abundant love for Allah and our beloved Prophet (PBUH). Also, I request that you please pray for our health for us to complete the umrah without any hassles.

I take this opportunity to ask forgiveness if I have hurt you intentionally/unintentionally in the past.

Wassalam,
Syed Mohamed Pattani. [Vasudevanallur]


Share:

உம்ரா பயணம் சிறக்க துஆச் செய்வோம் வாருங்கள்...

~ 📚 பிஸ்மில்லாஹ் : 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

✍ . அன்பிற்குரிய உறவுகளே!! நமது அல்அமீனின் முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை) அவர்கள் இன்று இரவு உம்ரா பயணம் செய்வதாக நம் மன்றத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் உம்ரா பயணம் சிறக்கவும், அவர்களுடைய அமல்களை லேசான முறையில் செய்யவும், அவர்களுடைய உம்ரா கபூலியத்தாகுவதற்கும் நம் சபையோர் எல்லோரும் இச்செய்தியின் மூலம் அவர்களுக்கு துஆச் செய்து கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்ககூடியவர்கள் இன்று இரவு 9 மணிக்கு தேரா ரூமுக்கு வாருங்கள் வாழ்த்தி வழியனுப்புவோம்.. 

அவர்கள் நம்மிடம் தெரிவித்துக் கொண்ட செய்தியாவது:-

I intend to visit the holy Mecca & Medina to perform Umrah, and we are leaving on October 17, 2024. I am all excited to visit the house of Allah (SWT) for the First time, Insha'Allah. May Allah help.

I request you all to kindly pray for me and my family for Allah to accept our Umrah & our prayers and to give us the strength and to fill our hearts with abundant love for Allah and our beloved Prophet (PBUH). Also, I request that you please pray for our health for us to complete the umrah without any hassles.

I take this opportunity to ask forgiveness if I have hurt you intentionally/unintentionally in the past.

Wassalam,
Syed ali badusa. [Uthumalai]
Share:

துபை அல் அமீன் ஜமாஅத்தின் அக்டோபர் மாதத்தின் மாதாந்திர கூட்டத்தின் அழைப்பிதழ் + நிகழ்ச்சி நிரல்.. !

 ~ பிஸ்மில்லாஹ் ~

┈•••❈• ❀ ••----

Subject: இன்றைய நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்ற நினைவூட்டல் செய்தி சம்பந்தமாக:-

நான்காவது மன்ற கூட்ட அழைப்பிதழ் & நிகழ்சி நிரல் .word

நான்காவது மன்ற கூட்ட அழைப்பிதழ் & நிகழ்சி நிரல் pdf

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் நாளை 05-10-2024 சனிக்கிழமை அன்று 7:30pm மணி அளவில்  இஷா தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி    நடைபெற உள்ளது.   நம் சபையின் உறவுகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

இப்படிக்கு:-
தகவல் தொடர்பு (அல் அமீன் ஜமாத் துபாய்)

~ 📚 பிஸ்மில்லாஹ் :  📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈

. அன்பிற்குரிய உறவுகளே!!  நேற்று 05-10-2024 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.. Everyone, thank you for your support. 🫂🫂
1️⃣.அதில் கடந்த மாத செயல்பாடுகள் &  நடக்க கூடிய‌ மாத செயல்பாடுகளை பற்றி சபையோரிடம் பேசி விபரிக்கப்பட்டது  அதற்கு எல்லோரும் ஒப்புதல்  தந்தார்கள். வாழ்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். மாஷா அல்லாஹ்.
2️⃣. கடந்த நான்கு முறை நடந்துள்ள உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில் இதுவரை ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.. தற்போது இதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது. ஷார்ஜா உறவுகளே உங்களையெல்லாம் தேடுது.. நீங்கதான் வரமாட்டுக்கீங்க... 😌😌😌.  என்று நம் சபையோர் எல்லோரும் வருத்தப்பட்டனர்.

அடுத்த‌ உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில்  அனைவரையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவும், ஒறுங்கிணைக்கவும்  சம்பந்தமாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க @Nagoor Hanifa Dubai  துணைச் செயலாளர் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது..

3️⃣. திருமண வாழ்த்து மடல் சம்பந்தமாக:- Logo [சின்னத்தில்]  குர்ஆன் படம் பொறிக்கப்பட்ட‌, உறுவமில்லாத Logo [சின்னத்தை] விரைவில் செயலர் தயாரித்து, சபையோரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் அதற்குரிய பொறுப்புதாரிகளான‌ @Aalim Dxb Arulachi  @Jinna  Chaa Arulatchi  அவர்களிடம் சமர்பித்து அடுத்த திருமணம் வருவதற்கு முன்னால்  விரைந்து முடிக்க துரித ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
4️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாத நடக்க இருக்கும் ந‌ம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்குள்  நம் உறவுகளிடையே இருக்கும்  outstanding  list- ஐ அறிக்கையாக‌ சமர்பிக்க‌ @Syed Treasurer UAE  பொருளாளர்,  மற்றும் துணை பொருளாளர் @Raffiq Madurai Dxb  அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.

5️⃣. ✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே!!  நமதூர் [வாசுதேவநல்லூர்] பெரிய பள்ளிவாசலில் தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வாரமாக நமதூர்  ஜமாஅத் கமிட்டி உறுப்பினர்கள் துபாயில் இருக்கக்கூடிய நம்மிடத்தில் சில உதவிகளை நாடி வந்துள்ளார்கள். இதற்கு என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்?  சம்பந்தமாக நமது  உறவுகளிடையே மஷ்வராஹ் கேட்கப்பட்டது 

ஒவ்வொருத்தரும் தாங்கள் பணி செய்யக்கூடிய இடத்தில், தங்களுக்கு தெரிந்த உறவுகளிடத்தில், இது விஷயமாக பேசி ஒவ்வொருத்தரும் பள்ளிக்காக வேண்டி உழைப்பு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி நடக்கும் நேஷனல் டே  [Dec 2, National Day] அன்று வரைக்கும் சேர்த்து வைத்து மொத்த பணத்தையும் ஒன்றிணைத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு எல்லோருமே உழைப்பு செய்ய வேண்டும் எல்லோருமே உதவி செய்திட‌ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இதற்கு பொறுப்புதாரியாக‌ @Dubai nagooran. vk  மதிப்பிற்குரிய V.நாகூரான் சாச்சா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் தங்களுடைய பங்களிப்புகளை தனிப்பட்ட முறையிலோ, குழுவாகவும் கொடுக்கலாம் என்று  முடிவு செய்யப்பட்டது..
நமதூர் பள்ளிக்காக வேண்டி ஒவ்வொருத்தரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி உதவிட கேட்டுக்கொள்கிறேன். 
6️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த நடக்க இருக்கும் [Dec 2, National Day] மீட்டிங் சம்பந்தமாக டோக்கன் முன்பதிவு அவசியம்  பெற‌ வேண்டும் என்றும்,  நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டோக்கன் முன்பதிவு செய்ய‌  துவங்க ஆரம்பிக்கும் என்றும், அதற்கு @Raffiq Madurai Dxb துணை பொருளாளர் ர‌ஃபிக் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
7️⃣. தற்போது இருக்கக்கூடிய நிர்வாகம் புதிதாக பொறுப்பேற்றதும் முத்தான மூன்று நலத்திட்டங்களோடு ஆரம்பித்தது. அத்திட்டத்தின் பெயராவது உங்களுக்கு "'எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும் '" நம் அல் அமீன் ஜமாஅத். 

https://alameendubaijamath.blogspot.com/2024/04/blog-post.html

அதில் ஒரு நலத்திட்டத்தை தற்போது எதிர் வரும் [Dec 2, National Day] நேஷனல் என்று award /  பதக்கம் /  உயர் சான்றிதழ் கொடுப்பதற்கு முன்னெடுப்புகள் துவங்கின‌_ 

1. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ அல்லது தனது தனி திறமையின் மூலம் award /  பதக்கம் /  உயர் சான்றிதழ் போன்றவைகளை பெற்றாலோ அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை ஊக்கவிக்க & மேண்மைப்படுத்த நம் அல் அமீன் ஜமாத் தோள் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.
2. அதற்குரிய தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள், போன்றவைகளை செயலர் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது..
8️⃣. நவம்பர் மாதம் முதல் சனிக்கிழமையான‌ 2-ஆம் தேதி -  மஃரிப் TO  இஷாவுக்குள் -  ரசிதியா பூங்காவில் வைத்து உறவுகள் சங்கமிப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் உணவு கொடுத்தவருக்கும், லெபனான் மக்களுக்கும், நம் உறவுகளிலயே இற‌ந்தவர்களுக்கும் நன்மை பயக்க யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது. வஸ்ஸலாம்.

இந்நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்

மேற்கண்ட தீர்மானித்தை நம் சபையின் எல்லோரும்  ஒருமனதாக ஏற்று ஒப்புதல் தந்தது நம் அனைவருக்கும் மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

பார்வையாளர்கள்

About