Educational Welfare.

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

10th, 11th, 12th Public Exam - 2025 அரசுப் பொதுத் தேர்வுக்கான விழிப்புணர்வு செய்தி:-

 ~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈

Subject:  இன்ஷா அல்லாஹ்  அடுத்த மாதம் நடக்க இருக்கும் 10th, 11th, 12th Public Exam - 2025 அரசுப் பொதுத் தேர்வுக்கான விழிப்புணர்வு செய்தி.

https://cmcwtrl.in/wp-content/uploads/2024/10/TN-Board-Public-Exam-Time-Table-2025.pdf

 ✅. அன்பு நிறைந்த உறவுக‌ளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ...…


இன்னும் ஒரிரு வாரங்களில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற உள்ளதால் நமது மஹல்லாவைச்சார்ந்த பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, படிக்கும் மாணவ மாணவியர்களின் மீது தனி கவனம் செலுத்தி அவர்கள் அதிக மதிப்பெண் பெற அல் அமீன் துஆ செய்கிறது.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை தங்களின் மஹல்லா சார்பாக செய்து தருமாறு தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவ - மாணவியர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்புகளின் விஷயத்தில் தனி கவனம் செலுத்துமாறும், தேர்வு முடியும் வரை அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், TV, செல் போன் ஆகியவைகளை கைப்பற்றி அவர்களின் மதிப்பெண் விஷயத்தில் அதிக ஊக்கம் தருமாறும், தனி கவனம் செலுத்துமாறும், அனைத்து பெற்றோர்களிடத்திலும் அன்பாக கேட்டுக் கொள்கிறது.

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் சில தேர்வுகள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ நாட்களிலும், ரமலான் மாத நோன்பு நாட்களிலும் வருவதால் நமது மஹல்லாவில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என ஆராய்ந்து ஜமாஅத் நிர்வாகம் அவர்களும் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு ஜமாஅத் நிர்வாகிகளிடத்தில் அல் அமீன் அன்பாக கேட்டுக் கொள்கிறது.

குறிப்பு: கடந்த வருடங்களை போல இந்த வருடம் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மானவர்களுக்கு நம் அல் அமின் ஜமாஅத் சார்பாக கண்ணியப்படுத்தி கௌரவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

எல்லா வல்லமை மிக்க இறைவன்  நம் அனைவருக்கும்  பரக்கத்தையும், நலமான, வளமான‌ வாழ்கையையும், தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻

*இப்படிக்கு:-
தகவல் தொடர்பு 
(அல் அமீன் துபாய்)
Share:

தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை!

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுந்துள்ள நிலையில், மேகி நூடுல்சுக்கு தமிழகத்தில் தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேகியை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே' இந்தியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்-ல் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்கள்.

 இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் மேகி நூடுல்ஸ் மற்றும் அதைப் போன்ற இதர நூடுல்ஸ் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 அதாவது 2.5 பி.பி.எம். (Parts per millon ) என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

 நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், மற்ற நூடுல்சுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2) (A)-ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார்.


 மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையிலிருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரகாண்ட், காஷ்மீர், கேரளா, குஜராத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மேகிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

IAS Entrance Exam-2014 Registration in { chennai }

 IAS Fees FREE & Room FREE & Food FREE .................
Alhamdulillah, We’re pleased to inform you that, Mohammed Ashraf, a student of our Azhagiya Kadan IAS Academy has cleared the UPSC Civil Services Examination, 2013. Mohammed Ashraf hails from Karaikudi, Sivagangai district. Awarded with the Bachelor Degree in Civil Engineering, 2011, Ashraf started preparations for Civil services examination in our Academy from 2012. Jazakkallah Khair, for all your prayers and duas. We wish Mohammed Ashraf for his future endeavors, In shaa Allah.   

                                                                      Click Photos

                                                                        Click Photos

                                                                         Click Video

Share:

சிவகிரி தாலுகாவில் 922 ரேஷன் கார்டுகள் தயார் கலெக்டர் தகவல்

நெல்லை, : ச¤வகிரி தாலுகாவில் 922 ரேஷன் கார்டுகள் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுதாரர்களுக்கு புதிய ரேஷன் கார் டுகள் அச்சடிக்கும் பணி கள் நடந்து வருகின்றன.
செங்கோட்டை தாலுகாவில் 520 ரேஷன் கார்டுகளும், ஆலங்குளம் தாலுகாவில் 531 ரேஷன் கார்டுகளும் அச்சிடப்பட்டு அந்தந்த குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சிவகிரி தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு வழங¢க கேட்டு மனு அளித்த தகுதியான 922 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. எனவே ரேஷன் கார்டுகளை அலுவலக வேலை நாட்களில் சிவகிரி குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.5 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ள லாம்.
பிற தாலுகாக்களில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சிடப்பட்டு தகுதியானவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகிரி&செங்கோட்டை சாலையில்
நடவடிக்கை எடுக்கப்படுமா?
புளியங்குடி, : சிவகிரி முதல் செங்கோட்டை வரை விதிகளை மீறி பகலில் செல்லும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடபகுதி எல்கையாக சிவகிரியும், கேரள எல்கையையொட்டி செங்கோட்டையும் உள்ளது. இச்சாலை சுமார் 60 கி.மீ. தூரம் உள்ள நிலையில் திருமங்கலம்& கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளும், சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளும் மற்றும் 25க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளும் உள்ளன.
இந்த சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு உணவு பொருள்களும், சிமென்ட், மணல், காய்கறிகள், எலு மிச்சை, பால், வைக்கோல் உள்ளிட்ட பொருள்களும் நூற்றுகணக்கான லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் செல்கின்றன. ஆரம்ப காலத்தில் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் இரவு 9.30 மணிக்கு மேல் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட் டது. ஆனால் சமீபகால மாக வைக்கோல், சிமென்ட் ஏற்றிவரும் லாரிகள், வேன்கள் பகல் நேரங்களில் வருவதால் சிவகிரி, வாசு
தேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், செங் கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பாடுகிறது.
இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்படி பகல் நேரங்களில் அளவுக்கு அதிகாமாக 10 டன் லாரியில் 20 டன் என்ற அளவில் சிமென்ட் மூடைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் அடிக்கடி சாலை பழுதாகிறது. அதே நேரத்தில் வைக்கோல் ஏற்றிவரும் லாரிகளால் விபத்துக்களும் தொடர்கிறது.
இதனை போலீசாரும், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் எள்ளளவும் கண்டுகொள்வதில் லை. இதனால் புளியங்குடி, கடையநல்லூர் பகுதிகளில் காலை,மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வெளியூர் செல்லும் பயணிகளும், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும், விபத்துக்களில் சிக்குபவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது.
அதிகாரிகளுக்கு மாமூல்
நெல்லை மாவட்ட வடபகுதி எல்கையான சிவகிரியில் நுழையும் அளவுக்கு அதிகமாக சிமென்ட் மூடைகள் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் வைக்கோல் லாரிகள் போலீசாருக்கும், வட்டார போக்கு வரத்து துறையினருக்கும் குறிப்பிட்ட அளவு மாமூல் கொடுப்ப தால் தான் அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட கலெக்டர் பறக்கும் படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
Share:

நெல்லை பகுதியில் ஆங்கில வழி கல்விக்கு அரசு பள்ளிகள் தயார்

நெல்லை, : அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 1ஆம் வகுப்பிற்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். ஒரு வகுப்பிற்கு குறைந் தது 20 மாணவர்களை சேர்க்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. 
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் ஆங்கில பிரிவு வகுப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கும் ஆயத்தமாக உள்ளனர். தங்கள் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கில வழி கல்வி தொடங்க உள்ளது குறித்த அறிவிப்பையும் பள்ளி முன்பு வைத்துள்ளனர். இதனால் ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர பிரிவு பெற்றோர் தங்கள் குழந்தைகளை 1ஆம் வகுப்பு ஆங்கில பிரிவில் சேர்ப்பதற்கு விசாரித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
பள்ளி திறக்கும் நாள் முதல் ஆங்கில வழி கல்விக்கான புதிய மாணவர்களை சேர்க்கவும் அவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் எழுதுபொருள் உள்ளிட்ட இலவச கல்வி பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாணவர்கள் அதிக அளவில் சேராத பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், “ஆங்கில வழி கல்வி கற்க அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 1ஆம் வகுப்பு சேரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த மாணவர்களை ஊக்குவிக்கவும் நன்றாக கற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் தமிழ் வழி கல்வியும் தொடர்ந்து தனி வகுப்பாக கற்றுத்தரப்படும்“ என்றனர்.
Share:

செங்கோட்டை பகுதியில் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

செங்கோட்டையில் சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஆண்டு தோறும் வருமானம் தரும் பயிரான சம்பங்கி பூ சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். செங் கோட்டை, கண்ணுப்புளிமெட்டு, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய பணப்பயிரான இந்த சம்பங்கிக்கு குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. 
மல்லிகைப் பூவின் வரிசையில் வரும் இந்த சம்பங்கி சீக்கிரத்தில் வாடாது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு அதிகளவில் சம்பங்கி பூ தேவைப்படுகிறது. இதன் தேவையை அறிந்து தற்போது இப்பகுதிகளில் அதிகளவில் சம்பங்கி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
சொட்டு பாசனம் என்றால் 2 நாளுக்கு ஒரு நாள் தண்ணீர்விட வேண்டும் என்றும், 365 நாட்களும் இந்த செடியிலிருந்து சம்பங்கியில் பூக்கள் பறிக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சம்பங்கி பூ மருத்துவ குணம் கொண்டது என்றும், இதில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்ற  தைலம், தலைவலியை போக்கும் தைலம், ஜீரண சக்தியை கொடுக்கும் மருந்து என தயாரிக்கப்படுவதாகவும், பலவகைகளில் சம்பங்கியின் தேவை சந்தையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். 
குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்டிதரும் சம்பங்கி பூவின் விவசாயத் தில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
Share:

விமான நிலைய விரிவாக்கத்திற்காக ரிங்ரோட்டில் 3 கிமீ தூரம் துண்டிக்க திட்டம்

மதுரை, : விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள இடத்தை விரைவாக ஒப்படைக்கும்படி விமான ஆணையம் கேட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங்ரோட்டை 3 கிமீ தூரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. இதன்படி தற்போதுள்ள விமான ஓடு தள நீளம் 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிக்க திட்டம் தயாராகி உள்ளது. இதற்காக 610 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து ஒப்படைக்கும்படி தமிழக அரசிடம் விமான ஆணையம் கோரியுள்ளது.
நில ஆர்ஜிதமானது பெருங்குடி, சின்ன உடைப்பு, பாப்பான்ஓடை, ராமன்குளம் போன்ற பகுதிகளில் முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த இடங்களுக்கு அரசு நிர்ணய விலையில் இருந்து அதன் உரிமையாளர்கள் கூடுதலாக விலை கேட்டு வருகின்றனர். இதில் விரைவில் முடிவு ஏற்பட்டு, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் விரைவில் விமான ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.  
இந்த நிலங்களுக்கும், விமான நிலைய வளாக எல்லைக்கும் நடுவில் மதுரை ரிங்ரோடு அமைந்துள்ளது. உத்தங்குடி, கப்பலூர் இடையிலான 27 கி.மீ. தூர ரிங்ரோட்டில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக மண்டேலா நகரில் இருந்து 3 கி.மீ. தூரம் துண்டிக்க வேண்டியுள்ளது. இதற்காக ரிங்ரோட்டை மாற்றுப் பாதையில் திருப்பி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதன்படி மதுரையில் இருந்து செல்லும் போது, மண்டேலா நகர் அருகில் வலது பக்கம் திரும்பி சரஸ்வதி நாராயணன் கல்லூரி வழியாக சுற்றி, மீண்டும் ரிங்ரோட்டில் இணையும் வகையில் ஆறரை கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க 2 ஆண்டுக்கு முன் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி முடித்தது. இதன்படி ரிங்ரோட்டை மாநகராட்சி சார்பில் நான்குவழிச்சாலையாக்க ரூ.121 கோடி மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் அப்படியே உள்ளது. 
இந்நிலையில் புதிய மாற்றுப் பாதையை உருவாக்கி சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி மதுரையில் இருந்து செல்லும் ரிங்ரோட்டில் மண்டேலா நகரில் இருந்து, இடது பக்கம் திரும்பி, சின்னஉடைப்பு கண்மாய் பகுதி வழியாக, அருப்புக்கோட்டை சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிங்ரோட்டில் துண்டிக்கப்படும் 3 கி.மீ. தூரத்திற்கு மாற்று பாதை குறித்து ஏற்கனவே ஆய்வு நடத்தி முடிக்கப்பட்ட பாதையில் சாலை அமைத்தால், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் வாகனங்களின் பயண தூரம் 6 கிமீ அதிகரிக்கும். 
எனவே அந்த பாதை மாற்றம் செய்யப்பட்டு, சின்னஉடைப்பு கண்மாயை தாண்டியுள்ள இடம் வழியாக புதிய மாற்று சாலை அமைத்து, அருப்புக்கோட்டை சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ரிங்ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரிக்கப்படுகிறதுÕ என்றார். ஆனால், இன்னும் எந்த பாதையில் சாலை அமைப்பது என இறுதி செய்யப்படவில்லை. 
ரிங்ரோட்டில் 3 கி.மீ. தூரம் துண்டிக்கும் முன்பே அதற்கு மாற்றுச் பாதையில் சாலை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாற்று சாலை அமைத்த பிறகே ரிங்ரோட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி ஒப்படைக்க முடியும். எனவே அதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                                                                  Thankyou      dinakaran
Share:

தமிழில் விண்டோஸ் 7

   
கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது....

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்....
 
 
 
Share:

மதம் மாறி திருமணம் செய்த பெண் கணவரின் ஜாதி தகுதியைக் கோர முடியாது....!


சென்னை: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தமது கணவரின் ஜாதிக்குரிய தகுதியை தமக்கும் வழங்க கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஏ. பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்குந்தர் ஜாதியை சேர்ந்த தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தேன். பிரேமாவதி என்ற பெயரையும் பாத்திமா என மாற்றினேன். இதனால் எனது கணவரின் 'லப்பை' ஜாதி சான்றிதழை எனக்கும் வழங்கக் கோரினேன்  காஞ்சிபுரம் துணை வட்டாட்சியரும் இதற்கான சான்றிதழை அளித்திருக்கிறார்.
 ஆனால் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நான் கலந்து கொண்டேன். ஆனால் பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில் என்னை சேர்க்காமல், பெண்கள் - இதரர் என்ற பிரிவில் டி.என்.பி.எஸ்.சி. சேர்த்துள்ளது. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். , பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) என்ற பிரிவில் என்னை சேர்த்து, எனக்கு பணி வாய்ப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
 இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது. உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மனுதாரருக்கு லப்பை என்று அளிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ் செல்லாது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.


Share:

இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம் அபராதம் ...!

சென்னை: தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

 இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, தொல்லியல்துறையில் எபிகிராபிஸ்ட்', கியுரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து நான் அந்த 4 பதவிகளுக்குமே விண்ணப்பித்தேன். குறிப்பாக கியுரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியாதவாறு எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கியுரேட்டர் பதவிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நான் இந்து மதத்தினர் அல்லாததால் மற்ற 3 பதவிகள் அளிக்க முடியாது என்றும் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்கான உத்தரவை கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பிறப்பித்தது.

 இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் நிராகதரித்தோம். கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது. 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, தொல்லியல்துறை என்பது இந்து சமய துறையல்ல. அதில் சில பணிகளுக்கு மட்டும் தான் இந்து சமயத்தினராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. ஆகையால் தொல்லியல்துறையில் பணிகளுக்கு இந்துக்கள் தான் சேர வேண்டும் என்று மததத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.

 கியுரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விண்ணப்பித்த பிறகு அந்தக் காரணத்தை காட்டி நிராகரிப்பது முறையன்று. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் பிரதிவாதிகள் வழங்க வேண்டும் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

Share:

KFC சிக்கன் ஹலாலா......? ஹராமா......?

 கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் காணவேண்டியது...



Share:

ஹஜ் பயணிகள் 421 பேர் தவிப்பு


தமிழ்நாட்டிலிருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா சார்பில் லிகேடி விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 421 பயணிகள் ஹஜ் செல்வதற்காக இருந்தனர். இந்நிலையில் விமானத்தை ஓடு பாதைக்கு தள்ளும் வாகனம் மூலம் தள்ளிக் கொண்டு வந்தபோது அங்கு டிராக்டரின் இரும்பு கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதில் விமானத்தின் இறக்கை மோதியதில் இறக்கை சேதம் அடைந்தது. இதனால் விமானம் குலுங்கியதையடுத்து உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள். உடனே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினார்கள். அவர்கள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது பொறியியலாளர்கள் வந்து விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்கள். இதில் திருப்தி ஏற்பட்டால் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும், இல்லையெனில் மும்பையில் இருந்து வேறு விமானம் வரவழைக்கப்பட்டு அதில் 421 பயணிகளும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
Share:

பேஸ்புக்கில் வலைவிரித்து... காதலித்து.. கருவைக் கலைத்து... டிராவல்ஸ் அதிபர் சிக்கினார்!

சென்னை: பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து பெண் என்ஜினியரை வசியம் செய்து பழகி, பின்னர் கருவைக் கொடுத்து, அதையும் கலைத்து தாறுமாறாக நடந்து கொண்ட டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இதே பாணியில் மேலும் 3 பெண்களை அவர் மோசடி செய்தது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏமாந்த என்ஜீனியரின் பெயர் ஜான்சி, 24 வயதாகிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். ஜான்சி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேஸ்புக்கில் 33 வயதான ராபர்ட் என்பவர் எனக்குப் பரிச்சயமானார். நட்போடு பழக ஆரம்பித்தார். தனது செல்போன் எண்ணையும் கொடுத்தார். காதலிப்பதாக கூற ஆரம்பித்தார்.
அவரும், நானும் கிறிஸ்தவர்கள் என்பதால் நானும் அவரது காதலை ஏற்றேன். தொடர்ந்து பேசி வந்தேன். முகம் பார்க்காமல் தொடர்ந்து அவரிடம் பேசி காதலித்து வந்தேன். இந்த நிலையில் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து அண்ணா நகர் டவர் பிளாக்கில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சென்றேன். கடந்த ஜனவரி மாதம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை. முதல் சந்திப்பிலேயே என்னை அவரிடம் நான் கொடுத்து விட்டேன். பிறகு என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தாயார் மற்றும் கடவுள் மீதும் சத்தியம் செய்து கூறியதால் நான் முழுமையாக நம்பினேன். பின்னர் மேலும் 2 சந்தர்ப்பங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.
இது எனது தாயாருக்கு தெரிய வந்து அவர் அதிர்ந்து போனார். மறுபக்கம் எனது கருவைக் கலைக்குமாறு ராபர்ட் வற்புறுத்தத் தொடங்கினார். கருவைக் கலைத்தால்தான் திருமணம் என்றும் மிரட்ட ஆரம்பித்தார். கருத்தடை மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தார். நானும் சாப்பிட்டேன். ஆனால் கரு கலையவில்லை.
இதனால் மீண்டும் ஒருமுறை மாத்திரையும், நாட்டு மருந்து ஒன்றையும் கொடுத்தார் ராபர்ட். அதைச் சாப்பிட்டதும் கரு கலைந்து அபார்ஷன் ஆகி விட்டது. இருப்பினும் கருவை முழுமையாகக் கலைப்பதற்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்து டிஎன்சி செய்தார்.
இது எனது தாயாருக்கும், சகோதரருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட்டை அவர்கள் நேரில் சந்தித்து என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர், அவரும் சரி என்றார்.
ஆனால் அதன் பின்னர் என்னுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டார். பேசுவதில்லை. மேலும் என்னைப் பற்றி எனது தோழிகளில் தவறான முறையில் பேச ஆரம்பித்தார். ஜாலியாக இருப்பதற்காகவே என்னுடன் பழகியதாகவும் அவர்களிடம் அவர் கூறினார்.
மேலும் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கவும் ஆரம்பித்தார். இப்போது பணம் தருகிறேன் என்றும் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜான்சி.
இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ராபர்ட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் பெண்களிடம் இதுபோல நைச்சியமாக பேசி பாலியல் மோசடி செய்வதை பொழுதுபோக்கு போல செய்து வந்தது தெரிய வந்தது. அதாவது நிர்மலா ராணிதவிர மேலும் 3 பெண்களிடம் அவர் மோசடி செய்துள்ளார். ஜான்சியை உதறிய பின்னர் தற்போது கல்லூரி மாணவி ஒருவரிடம் அவர் பழகி வருவதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்... 

Share:

காயல்பட்டினம் டாக்டர் எம்.ஏ. முஹம்மது தம்பிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, தங்கள் வாழ்நாளை சமுதாயத்திற்கு அர்ப்பணம் செய்து அருந்தொண்டாற்றிய சிறந்த மருத்துவர்கள், சிறந்த ஆசிரியர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கவுரவித்து வருகின்றது.

அதன்படி இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை காயல்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு, கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் குழந்தை நல மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் எம்.ஏ. முஹம்மது தம்பி M.B., M.D. (Paed.), DCH அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை செப்டம்பர் 5 அன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் தம்பி அவர்களுக்கு, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பி.ஜெயகுமார் வழங்கி கவுரவித்தார். டாக்டர் தம்பி அமெரிக்காவில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் தம்பி, காயல் கல்வித் தந்தை எம்.கே.டி அப்பா அவர்களின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது...
 
வாழ்த்து :

 சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் எம்.ஏ. முஹம்மது தம்பி அவர்களை அல் அமீன் துபை ஜமாஅத்தின்  மனமார பாராட்டுவதோடு, அவரது சேவை இன்னும் பல ஆண்டுகள் இறைவனருளால் தொடரவேண்டும் என வாழ்த்துகிரது .............


Share:

150 கி.மீ பயணிக்கும் சோலார் ரிக்ஷாவை உருவாக்கி தமிழக வாலிபர் சாதனை



சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் ரிக்ஷா ஒன்றினை தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ (26) என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.
"ஈக்கோ ப்ரீ கேப்"(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரிக்ஷாவில் 3 பேர் வரை பயணம் செய்யலாம்.
மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை இந்த சோலார் ரிக்ஷாவில் பயணம் செய்யலாம்.
சூரிய மின்சக்தி தீர்ந்துவிட்டால் கூட சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும் என்பது இந்த ரிக்ஷாவின் கூடுதல் சிறப்பு ஆகும்.
இது குறித்து சிவராஜ் கூறுகையில், இந்த சோலார் ரிக்ஷாவை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆனது. முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தன.
பின்னர் அவற்றையெல்லாம் சரி செய்து தற்போது இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டேன் என்றும் வணிக ரீதியில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த ரிக்ஷாவுக்கு பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது என்று கூறும் சிவராஜ், தனது இந்த கண்டுபிடிப்புக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த புதிய சோலார் ரிக்ஷாவை சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன் என்று தெரிவித்தார்.
கார்பன் புகையால் திணறி வரும் இந்நகரங்களுக்கு இந்த புதிய சோலார் ரிக்ஷா நிச்சயம் வரப்பிரசமாக இருக்கும் என கூறப்படுகின்றது
Share:

கீழக்கரை பெண்கள் கல்லூரி முதல்வருக்கு விருது!

15.08.2012  அன்று  புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதாஅவர்கள் மாநில அளவிலான "சிறந்த சமூக சேவகர்" விருதினை கீழக்கரை தாஸீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுமையா அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார். 
Share:

புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Share:

பார்வையாளர்கள்

About