Educational Welfare.

வெள்ளானைக் கோட்டை செல்லம்மாள் ஆச்சா அவர்களின் வபாஃஅத் செய்தி


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

வெள்ளானைக் கோட்டை சண்முகதேவர் தெருவைச்  சேர்ந்த நமது சபையின்  செயலர் அவர்களின் தாயாரின் அம்மாவும்,  வெள்ளானைக் கோட்டை மர்ஹும். மசூது மரைக்காயர் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மூஸா மற்றும் ஹமிதா  பீவி அவர்களின் தாயருமான  மர்ஹுமா  செல்லம்மாள் ஆச்சா அவர்கள் 12/09/2025 வெள்ளிக்கிழமை  மதியம் 12 :48 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)  அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு வெள்ளானைக்கோட்டையில் வைத்து நடைபெறும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! 

இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! 

இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! 

இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! 

இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!   

இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!

பொறுமையை தருவாயாக! 


ஆமீன். ஆமீன்...

Share:

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 23- ஆம் ஆண்டு துவக்க விழாவும்.. நிர்வாகிகள் தேர்வும்....

 

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

AL AMEEN DUBAI JAMATH.

 

அல் அமீன் துபை ஜமாஅத். [ஐக்கிய அரபு அமீரகம்.]

 

குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.  [ஸஹீஹுல் புகாரி - 5027]   

 

                                                                                                                               நாள்:– 30-03-2025

கண்ணியம் நிறைந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 23- ஆம் ஆண்டு துவக்கவிழாவும், நோன்பு பெருநாள் கோலாகல உறவுகள் சந்திப்பு நிகழ்சியும்  30/03/2025 ஞாயிற்றுக்கிழமை عيد الفطر  ஈதுல் பிfத்ர் நோன்பு பெருநாள் அன்று காலை 11.30 மணி அளவில்  துபை [JABIL] ஜபில் பார்க்கில் வைத்து நடைபெற்றது. இவ்வுறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து உறவுகளும் பரவலாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இச்சபை கூட்டத்திற்கு  தலைவராக மதிப்பிற்குரிய அருளாச்சி S. ஜலாலுதீன் அவர்கள் பொறுப்பேற்க  மதிப்பிற்குரிய  General Administrator v. கமால் மைதின். BE அவர்கள். அவர்கள் அதனை வழி மொழிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மவ்லானா S. முஹ்யித்தின் ஆலிம். அவர்கள் கிராஅத்  ஓதி இச்சபையை இனிதே துவங்கி வைத்தார்கள்..

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது அதில் கீழ் காணும் நபர்கள் நம் சபையின் பொறுப்புதாரிகளாக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 

தலைவர்                   :       P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  

துனைத் தலைவர்          :     N.முகம்மது கனி குட்டி (சோலைசேரி)

செயலாளர்                 :     மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)  

உதவி செயலாளர்         :     M.மைதீன் மேத்தபிள்ளை (மேல மருதப்பபுரம்)

பொருளாளர்                :      M. செய்யது மலுக்கு மேத்தா (வெள்ளானைக் கோட்டை) 

துனைப் பொருளாளர்            :      M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 

தொலைத் தொடர்பு தகவலர் :    S. செய்யது முகமது பட்டாணி (வாசுதேவநல்லூர்)

செயற்குழு உறுப்பினர்கள் :     A. முக‌ம்மது திவான்ஷா (வாசுதேவநல்லூர்)        M. செய்யது இப்ராஹிம் [RTA] [சங்கரன் கோவில்] M. திவான் அலி (வாசுதேவநல்லூர்) V. நசுருதீன் [ஆத்துவழி]. S.செய்யது பட்டாணி [ஊத்துமலை]  M.முகம்மது ரபீக் (வெள்ளானை கோட்டை)                                              M. அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர்)  

கல்விக் குழு:      பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் [அருளாச்சி] S.முகமது அலி ஜின்னா [அருளாச்சி] S.அப்துல் காதிர் (வாசுதேவநல்லூர்) ஆகீயோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதனை மகிழ்வுடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்..

தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகளை தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

1. Abu Dhabi -. ஜனாப்  S. ஹபீப் மைதீன். [ஊத்துமலை] , முகைதின் ஓலி (வாசுதேவநல்லூர்) அவர்கள். 

2. Sharjah -  ஜனாப்  முஹமது நவாஸ் காகா [சென்னை] அவர்கள். 

3. Dubai - Deira -  ஜனாப் S.செய்யது அலி பாதுஷா என்ற செல்லவாப்பா (ஊத்துமலை) அவர்கள்.

4. Dubai - Al Quoz - ஜனாப் M. முக‌ம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்) அவர்கள்.

5. Dubai - Al Qusais - ஜனாப். M. செய்யது இப்ராஹிம் [RTA] [சங்கரன் கோவில்] அவர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள  Location-னில் தங்களின் இருப்பிடத்திற்கு மிக அருகில் எந்த‌ Location இருக்கிறதோ அவரே உங்களுடைய மண்டல பொறுப்புதாரியாக ஆகுவார்.

 

 

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈••• •••••┈┈┈┈┈┈┈┈┈┈•••

 

 

Share:

இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார் நிகழ்ச்சி...

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

*Subject:* _இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார் நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகள் தீவிரமாக தொடங்கின_🤲🏻💐


✍🏻. அன்பும், பாசமும், மிகுந்த உறவுகளுக்கு!!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..

 அன்பார்ந்த நோன்பாளிகளே! ரமலான் மாதத்தினுடைய பரக்கத்தும், சிறப்பும் நம் அனைவருக்கும் நின்றில்லாமல் கிடைக்கட்டுமாக!.. ஆமின். 🤲🏻

அன்பிற்குரிய உறவுகளே!! நம்முடைய திட்டமிடுதலின்படி இரண்டாம் பத்து நோன்புக்குள் இப்தார் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தது போல இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக, செம்மையாக, நடத்திட அதனுடைய பொறுப்புதாரிகளுக்கு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

 உறுதியான தேதி, நேரம், இடம் போன்றவைகளை தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் இருக்கிறது. 

தலைவரின் உறுதியான ஒப்புதல்  வந்ததும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் உறுதியான அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அல்லாஹ் [ﷻ]  எனக்கும், உங்களுக்கும் இதுவரை நாம் செய்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும்,  ஏற்றுக் கொள்வானாக!!! 🤲🏻

 மீதமுள்ள நாட்களையும் தங்கு தடையம் இல்லாமல் நோன்பிருந்து வணக்க வழிபாடு செய்யும் பாக்கியத்தையும், நோன்பிலிருந்து இறையச்சம் பெரும் பாக்கியத்தையும், வல்லோன் நம் அனைவருக்கும் குறைவில்லாமல் தந்தருள்வானாக!!. ஆமீன்.. 🫶🏻🫂

இப்தார் நிகழ்ச்சி இனிமையாக நடைபெற துஆ செய்ய வேண்டுகிறேன். 🤲🏻🤲🏻

*இப்படிக்கு*  
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 
துணைச் செயலாளர்..


மேலதிக தகவலுக்கு:-

http://alameendubaijamath.blogspot.com/2025/02/blog-post.html
Share:

பார்வையாளர்கள்

About