நான்காவது மன்ற கூட்ட அழைப்பிதழ் & நிகழ்சி நிரல் .word
நான்காவது மன்ற கூட்ட அழைப்பிதழ் & நிகழ்சி நிரல் pdf
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் நாளை 05-10-2024 சனிக்கிழமை அன்று 7:30pm மணி அளவில் இஷா தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள [Rashidiya] பூங்காவில் வைத்து நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் சபையின் உறவுகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்…
இப்படிக்கு:-
தகவல் தொடர்பு (அல் அமீன் ஜமாத் துபாய்)~ 📚 பிஸ்மில்லாஹ் : 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
✍ . அன்பிற்குரிய உறவுகளே!! நேற்று 05-10-2024 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள [Rashidiya] பூங்காவில் வைத்து நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.. Everyone, thank you for your support. 🫂🫂
1️⃣.அதில் கடந்த மாத செயல்பாடுகள் & நடக்க கூடிய மாத செயல்பாடுகளை பற்றி சபையோரிடம் பேசி விபரிக்கப்பட்டது அதற்கு எல்லோரும் ஒப்புதல் தந்தார்கள். வாழ்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். மாஷா அல்லாஹ்.
2️⃣. கடந்த நான்கு முறை நடந்துள்ள உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில் இதுவரை ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.. தற்போது இதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது. ஷார்ஜா உறவுகளே உங்களையெல்லாம் தேடுது.. நீங்கதான் வரமாட்டுக்கீங்க... 😌😌😌. என்று நம் சபையோர் எல்லோரும் வருத்தப்பட்டனர்.
அடுத்த உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில் அனைவரையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவும், ஒறுங்கிணைக்கவும் சம்பந்தமாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க @Nagoor Hanifa Dubai துணைச் செயலாளர் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது..
3️⃣. திருமண வாழ்த்து மடல் சம்பந்தமாக:- Logo [சின்னத்தில்] குர்ஆன் படம் பொறிக்கப்பட்ட, உறுவமில்லாத Logo [சின்னத்தை] விரைவில் செயலர் தயாரித்து, சபையோரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் அதற்குரிய பொறுப்புதாரிகளான @Aalim Dxb Arulachi @Jinna Chaa Arulatchi அவர்களிடம் சமர்பித்து அடுத்த திருமணம் வருவதற்கு முன்னால் விரைந்து முடிக்க துரித ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
4️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாத நடக்க இருக்கும் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்குள் நம் உறவுகளிடையே இருக்கும் outstanding list- ஐ அறிக்கையாக சமர்பிக்க @Syed Treasurer UAE பொருளாளர், மற்றும் துணை பொருளாளர் @Raffiq Madurai Dxb அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.
5️⃣. ✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே!! நமதூர் [வாசுதேவநல்லூர்] பெரிய பள்ளிவாசலில் தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வாரமாக நமதூர் ஜமாஅத் கமிட்டி உறுப்பினர்கள் துபாயில் இருக்கக்கூடிய நம்மிடத்தில் சில உதவிகளை நாடி வந்துள்ளார்கள். இதற்கு என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? சம்பந்தமாக நமது உறவுகளிடையே மஷ்வராஹ் கேட்கப்பட்டது
ஒவ்வொருத்தரும் தாங்கள் பணி செய்யக்கூடிய இடத்தில், தங்களுக்கு தெரிந்த உறவுகளிடத்தில், இது விஷயமாக பேசி ஒவ்வொருத்தரும் பள்ளிக்காக வேண்டி உழைப்பு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி நடக்கும் நேஷனல் டே [Dec 2, National Day] அன்று வரைக்கும் சேர்த்து வைத்து மொத்த பணத்தையும் ஒன்றிணைத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு எல்லோருமே உழைப்பு செய்ய வேண்டும் எல்லோருமே உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இதற்கு பொறுப்புதாரியாக @Dubai nagooran. vk மதிப்பிற்குரிய V.நாகூரான் சாச்சா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் தங்களுடைய பங்களிப்புகளை தனிப்பட்ட முறையிலோ, குழுவாகவும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது..
நமதூர் பள்ளிக்காக வேண்டி ஒவ்வொருத்தரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி உதவிட கேட்டுக்கொள்கிறேன்.
6️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த நடக்க இருக்கும் [Dec 2, National Day] மீட்டிங் சம்பந்தமாக டோக்கன் முன்பதிவு அவசியம் பெற வேண்டும் என்றும், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டோக்கன் முன்பதிவு செய்ய துவங்க ஆரம்பிக்கும் என்றும், அதற்கு @Raffiq Madurai Dxb துணை பொருளாளர் ரஃபிக் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
7️⃣. தற்போது இருக்கக்கூடிய நிர்வாகம் புதிதாக பொறுப்பேற்றதும் முத்தான மூன்று நலத்திட்டங்களோடு ஆரம்பித்தது. அத்திட்டத்தின் பெயராவது உங்களுக்கு "'எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும் '" நம் அல் அமீன் ஜமாஅத்.
https://alameendubaijamath.blogspot.com/2024/04/blog-post.html
அதில் ஒரு நலத்திட்டத்தை தற்போது எதிர் வரும் [Dec 2, National Day] நேஷனல் என்று award / பதக்கம் / உயர் சான்றிதழ் கொடுப்பதற்கு முன்னெடுப்புகள் துவங்கின_
1. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ அல்லது தனது தனி திறமையின் மூலம் award / பதக்கம் / உயர் சான்றிதழ் போன்றவைகளை பெற்றாலோ அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை ஊக்கவிக்க & மேண்மைப்படுத்த நம் அல் அமீன் ஜமாத் தோள் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.
2. அதற்குரிய தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள், போன்றவைகளை செயலர் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது..
8️⃣. நவம்பர் மாதம் முதல் சனிக்கிழமையான 2-ஆம் தேதி - மஃரிப் TO இஷாவுக்குள் - ரசிதியா பூங்காவில் வைத்து உறவுகள் சங்கமிப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் உணவு கொடுத்தவருக்கும், லெபனான் மக்களுக்கும், நம் உறவுகளிலயே இறந்தவர்களுக்கும் நன்மை பயக்க யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது. வஸ்ஸலாம்.
இந்நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்
மேற்கண்ட தீர்மானித்தை நம் சபையின் எல்லோரும் ஒருமனதாக ஏற்று ஒப்புதல் தந்தது நம் அனைவருக்கும் மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
0 comments:
Post a Comment