Educational Welfare.

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

துபாயில் தமிழர்கள் ஏற்பாடில் இலவச மருத்துவ முகாம் ! சின்னஞ்சிறு குழந்தைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி



துபாய்: துபாயில் தமிழர்கள் நிர்வாகிகளாக சேவையாற்றும் ஈமான் கல்சுரல் சென்டர் சமூக நல அமைப்பு  தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார். இந்த மருத்துவ முகாம் தும்பே மருத்துவமனை ஒத்துழைப்புடன் துபாய் சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பவர் செக்யூரிட்டி தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. இதற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார்.

ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப்பணிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த முகாமில் இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் அதிகமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஹுசைன் அவர்களால் பவர் குழுமம் சிறப்பான வகையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவ முகாம் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இந்த முயற்சிகளை மேற்கொண்டு ஈமான் கல்சுரல் சென்டரின் நிர்வாகிகளை பாராட்டினார். இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் பூங்கொத்து கொடுத்து டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பவர் குழும மேலாளர் அமீர், வர்த்தக பிரமுகர் அபுதாகிர் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் ரத்ததானம், புகைபிடித்தலை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வினை மேற்கொண்டனர். முகாமில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை தர்மபாலன், கஜினி முகம்மது, ஈமான் அமைப்பின் செயலாளர்கள் முதுவை ஹிதாயத், முகைதீன் அப்துல் காதர், பைசுர் ரஹ்மான், இக்பால், சீனி பாவா, சபீகுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்
Share:

இரண்டரை மாதமான தமிழக இளைஞரின் உடல் துபை மருத்துவமனையில் !

துபை மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞரின் உடலை இரண்டரை மாதமாகியும் வாங்க யாரும் வராததால், அவர் உடலை உறவினரிடம் ஒப்படைக்க துபாய் ஈமான் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.
துபையில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ்(வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபை ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி இறந்து விட்டார்.
எனினும் இவரது உடலைக் கேட்டு எவரும் இதுவரை வரவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த துபை ஈமான் அமைப்பினர் சேகர் தங்கராஜ் குறித்த விபரங்களை அறிந்து அவரது உறவினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
படத்தில் காணும் சேகர் தங்கராஜ் குறித்த தகவல் தெரிந்தவர்கள் துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா 050 467 43 99 மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகிய எண்களிலோ அல்லது info@imandubai.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவித்து உதவலாம்.
Share:

இலங்கையில் மிரட்டி மசூதியை மூடிய அமைச்சர்.....!!

கொழும்பு - இலங்கையில் மாகாண அமைச்சர் ஒருவர் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலை மூடச் சொன்னதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் பதுளை மஹியங்கனை  என்ற இடத்தில் மஸ்ஜிதுல் அரபா மசூதி உள்ளது. இன்று (19.07.13) காலையில் அங்கு ஊவா மாகாண அமைச்சர் வந்து, மசூதியில் தொழுகைகளை நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளார்.
மக்கள் தினமும் ஐந்து வேளைமசூதியில் தொழுகைப் புரிகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஜூம்ஆ என்ற சிறப்புத் தொழுகை நடைபெறுகிறது. அமைச்சரின் மிரட்டலை அடுத்து மசூதி மூடப்பட்டு விட்டதால்   ஜூம்ஆ  தொழுகையும் நடைபெறவில்லை. இதனால் அந்தப் பகுதி முஸ்லிம்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். 

இதே மசூதியில் சில தினங்களுக்கு முன்பாக, மர்ம நபர்கள் சிலர் பன்றி இறைச்சியினை வீசியது குறிப்பிடத்தக்கது.
Share:

கென்யாவின் அதிபராகத் துடிக்கும் ஒபாமாவின் அண்ணன்

நைரோபி, மார்ச் - 11 -  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். இவருக்கு மொத்தம் 12 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்று கூறுகிறார் மாலிக். இருப்பினும் கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் இவர் தோல்வியைச் சந்தித்துள்ளார். இவருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் இடையே இன்னும் நல்ல தொடர்பு உள்ளதாம்.
அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்களாம். வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் போய் தம்பியைப் பார்த்து விடுவாராம் மாலிக். கணக்காளராகப் பணியாற்றி வரும் மாலிக், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வருகிறார். 
தனது தம்பி தங்களது குடும்பத்துக்குப் பணம் எதுவும் தருவதில்லை என்று வருத்தப்படும் மாலிக், தனது கென்ய குடும்பத்துக்கு ஒபாமா நிதியுதவி தரலாம். இருப்பினும் நான் அதை வலியுறுத்துவதில்லை என்றார். தம்பி பெயரைப் பயன்படுத்தி நான் புகழ் பெற பார்க்கிறேன் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அது தவறு. என் தம்பியின் பெயரை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது என்று கோபமாக கேட்கிறார் மாலிக். மேலும் ஒபாமாவுக்கு முன்பேதான் பிறந்து விட்டதாக கூறும் மாலிக், எனக்குப் பின்னால் பிறந்தவர்தான் அமெரிக்க அதிபர் என்றும் மார் தட்டிச் சொல்கிறார்.
கடந்த வாரம் நடந்த நாடு தழுவிய தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். ஆனால் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதைப் பெரிய தோல்வியாக நினைக்கவில்லை. கென்ய அதிபராவேன். அது உறுதி. அதுதான் எனது ஒரே லட்சியம் என்று கூறுகிறார். மாலிக்குக்கு மொத்தம் 12 மனைவிகள். இதில் 12வதாக அவர் மணந்துள்ள பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது. அவரது பெயர் ஷீலா அன்யாங்கோ. வெறும் 24 பவுண்டு பணத்தை நன்கொடையாக கொடுத்து இப்பெண்ணை மணந்து கொண்டார் மாலிக்.
ஒபாமா மற்றும் மாலிக்கின் தந்தை ஒருவர்தான். ஆனால் தோற்றத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. மாலிக் சுத்தமான கென்யர் போல தோற்றமளிக்கிறார். இருப்பினும் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையே பாசப் பிணைப்பும், நட்பும் உள்ளதாம்.திருமணத்திற்கு முன்பு ஒபாமாவின் மனைவி மிஷல் கென்யா வந்து ஒபாமா குடும்பத்தினரை சந்தித்துப் பேசி மகிழ்ந்தாரம். மிஷல் ஒரு அருமையான பெண் என்று பாராட்டுகிறார் மாலிக்.
Share:

ஆண்டிபயாடிக்ஸுக்கு கிருமிகள் கட்டுப்படாத தன்மை அதிகரிக்கிறது'

ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக் கூடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சேலி டேவிஸ் கூறினார்.
இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும் , எப்போது வெடிக்கக்கூடிய குண்டு என்றும் அவர் வர்ணித்தார்.
ஒரு புதிய வகையைச் சேர்ந்த ஆண்டிபயாடிக் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 25 ஆண்டுகள் ஆகின்றன.

அதற்கு நேர் எதிராக, புதிய நோய்க் கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகிவருகிறது என்று அவர் கூறினார்.
புதிய நுண்ணுயிர் எதிரிகளை (ஆண்டிபயாடிக் மருந்துகள்) உருவாக்க , மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும் சேலி டேவிஸ் கூறினார்.
Share:

குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......!

இந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார்  இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார்.

கடந்த 2010ம் ஆண்டு, யூலை மாதம் இவரது மனைவி சாரா (வயது 33), குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக 7வயது மகனை பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் பிணத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்கவும் அந்த பெண் முயன்றுள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிடம் பொலிஸார் விசாரித்தபோது, துஷ்ட ஆவிகளின் தூண்டுதலின் பேரில் சுயநினைவு இழந்தவளாய் இந்த தவறை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

லண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது பொலிஸார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
Share:

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலகநாடுகளும் , அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல் அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித்தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
Share:

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: மேலும் ஒரு நடிகை குமுறல்

வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட  படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர். மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் கலவரமானதில் 7 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் அந்த படத்தில் நபிகள் நாயகத்தின் இளைய மனைவியாக நடிக்க வைக்கப்பட்ட அன்னா குர்ஜி(21) கூறுகையில்,
இந்த படம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரானது என்று கூறாமல் நகோலா என்னை ஏமாற்றிவி்ட்டார். படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவியாக நடித்தேன். ஆனால் ஜார்ஜ் கதாபாத்திரத்தின் பெயர் முகம்மது என்று மாற்றப்படும் என்று எனக்கு தெரியாது. நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். மத்திய கிழக்கு நாட்டு மக்கள் என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயமாக உள்ளது. நான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் நான் வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததாக அவர்கள் நினைக்கலாம். நான் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறேன்.
அந்த படத்தில் எனது முகம் தெளிவாக உள்ளது. படத்தைப் பார்ப்பவர்கள் என்னைப் பார்ப்பார்கள். டெசர்ட் வாரியர்ஸ் என்ற படத்தை எடுப்பதாகத் தான் நானும், சக நடிகர்-நடிகைகளும் நம்பினோம். மதம் பற்றி இயக்குனர் பேசவேயில்லை. ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவி ஹில்லரியாக நடிக்க வேண்டும் என்றனர். பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் விழும் வால் நட்சத்திரம் பற்றிய படம் என்றனர்.
ஒரு நாளைக்கு ரூ.4,000 சம்பளமாகக் கொடுத்தனர். இப்படி படத்தை முடித்த பிறகு இவ்வாறு செய்வார்கள் என்று அதில் நடித்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்றார்
Share:

சல்மான் ருஷ்டியின் தலைக்கு ரூ.18.15 கோடி சன்மானம்: ஈரான் மதவாத அமைப்பு அறிவிப்பு

மாஸ்கோ: சர்ச்சைக்குரிய சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை எழுதிய சல்மான் ருஷ்டி தலைக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகை ரூ.18 கோடியே 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்று வாழும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் நாவல் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறிய ஈரான் மதவாத தலைவர் அயத்துல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா கொடுத்ததுடன் அவரைக் கொலை செய்பவர்களுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.18 கோடியே 15 லட்சமாகியுள்ளது. சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவருக்கு ரூ.18 கோடியே 15 லட்சம் வழங்கப்படும் என்று ஈரானைச் சேர்ந்த மதவாத அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த படத்திற்கும் ருஷ்டிக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

Share:

டொமைன்களுக்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்பு

  ரியாத்: இணையதள டொமைன் நேம்களில் . catholic, . baby, . gay போன்ற பலவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சவூதி அரேபியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
எந்தெந்த பெயர்களில் டொமைன் நேம்கள் இருக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியலையும் இது தொடர்பான சர்வதே அமைப்புக்கு சவூதி அரேபியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
.com, .co, .uk போன்ற வழக்கமான டொமைன் நேம்கள் இல்லாமல் குறிப்பிட்ட பல சொற்களில் டொமைன் நேம்களை அடுத்த ஆண்டு முதல் அனுமதிக்கலாம் என்று சர்வதேச அமைப்பு முடிவெடுத்திருந்தது. உதாரணமாக வாட்டிகனானது .va என்ற பெயரில் டொமைன் நேம் வைத்திருக்கிறது. ஆனால் தற்போது .catholic என்ற டொமைன் நேம் கேட்டிருக்கிறது. இதற்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. மதம் சார்ந்த விஷயங்களை டொமைன் நேம்களாக பயன்படுத்துவது சரியாக இருக்காது. அதனால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
இதேபோல் .gay என்ற டொமைனுக்கும் சவூதி கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கக் கூடியது. உலகின் பல நாடுகள் ஓரினச் சேர்க்கை என்பது தங்களது கலாசாரத்துக்கு எதிரானதாகக் கருதும் நிலையில் இத்தகைய டொமைன்களை அனுமதிக்கக் கூடாது என்று வாதிடுகிறது சவூதி.
மற்றொரு டொமைன் நேம்.. குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினர் .baby என்ற டொமைனை பயன்படுத்த விரும்புகின்றனர். சவூதி அரேபியாவோ இதனை ஆபாச இணையதளங்களை இயக்குவோர் பயன்படுத்தக் கூடும் என்று கூறுகிறது.,
இதுமாதிரி இஸ்லாத்துக்கு எதிரான .tatoo, .bar போன்றவையும் சவூதி அரேபியாவின் எதிர்ப்புப் பட்டியலில் இருக்கிறது.
Share:

அஹ்மத் ஷஃபீக் U.A.E ஷேக் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகர்!


அபுதாபி:எகிப்தின் முன்னாள் பிரதமரும், கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய வேட்பாளருமான அஹ்மத் ஷஃபீக் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளரும், அபுதாபி அமீருமான ஷேக் கலீஃபா பின் ஸெய்தின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அமீரின் அலுவலகத்தில் இருந்து வெளியான சிறப்பு செய்திக் குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது முர்ஸியிடம் தோல்வியை தழுவியவுடன் அஹ்மத் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறிவிட்டார். உம்ராவுக்கு பிறகு புதிய அரசியல் கட்சியை துவக்குவதற்கான பிரச்சாரத்திற்காக எகிப்திற்கு திரும்புவேன் என கூறி ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறியிருந்தார்.
ஆனால், பின்னர் அவர் அபுதாபிக்கு வருகை தந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய அதிகாரப்பூர்வ பதவி கிடைத்துள்ளதால், எகிப்தின் அரசியலில் இருந்து விலகவே ஷஃபீக் திட்டமிட்டுள்ளார் என கருதப்படுகிறது. சில ஊழல்கள் தொடர்பாக கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் ஷஃபீக் எகிப்தை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.
Share:

உலகில் ஒரு பில்லியன் மக்கள் கடும் பட்டினியால் வாடுகின்றனர்!


லண்டன்:உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள் பட்டினியால் வாடுவது உலக மக்கள் சமூகத்திற்கு அவமானமாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்பது உலகமக்களை மாத்தியோசிக்க தூண்டவேண்டும்.
இந்த ஆண்டு மட்டும் 4 கோடியே 30 லட்சம் பேர் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கோடிக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவினால் துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது.
Share:

குறிப்பிட்ட நேரத்தில் தொழுவது அல்ஸிமர்ஸ் நோயை 50% குறைக்கும்: அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்!

வாஷிங்டன்: குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய நபர்களுக்கு நோயின் கடுமை 24 சதவீதம் குறைவாக இருக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. அல்ஸிமர்ஸ் நோயை தடுக்க இதர பயிற்சி வகைகளை விட குறித்த நேரத்தில் தொழுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார்.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

Thanks to thoothu
Share:

இப்படித்தான் இருக்கிறதாம் செவ்வாய் கிரகம்.. நாசாவின் புதிய தகவல்!

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் கிரேட்டர் ஆகியவை படு அழகாக காட்சி தருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா. இந்தப் படங்கள் நாசா அனுப்பியுள்ள Mars Exploration Rover Opportunity என்ற விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இந்த விண்கலத்தின் மீது பொருத்தப்பட்ட பான்கேம் எனப்படும் பானரோமிக் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 817 புகைப்படங்களை இந்த கேமரா எடுத்துத் தள்ளியுள்ளது
 செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.
நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011ம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 2012 மே 8ம் தேதி வரை இங்கு ரோவர் விண்கலம் நிலை நின்றிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. 2வது படத்தில் செவ்வாய் கிரகத்தின் கிரேட்டர் அழகாக காணப்படுகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

ஆலுரியான் வைரஸினை அகற்ற புதிய வழிகள்!

ஆலுரியான் என்ற வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கேட்டிருப்போம். இந்த ஆலுரியான் வைரஸ் மூலம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள சில ட்டூல்ஸ் வசதியினை பயன்படுத்தலாம்.

நிறைய வலைத்தளங்களில் சில தொழில் நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம்.

இந்த ஆலூரியான் வைரஸை தடுக்கவும் எளிய வழிகளை வழங்குகிறது சில வலைத்தளங்கள். ஆலூரியா வைரஸினை அகற்றுவதற்காக பிரத்தியேகமாக உள்ள ட்டூல்களை டவுன்லோட் செய்து சிஸ்டமில் வைத்து கொள்ளலாம்.

இதனால் இந்த வைரஸின் மூலம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதை எளிதாக தெரிந்து கொள்ளவும் முடியும், அந்த வைரஸினை அகற்றவும் முடியும். இந்த ட்டூல்களை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.

ட்ரென்டு மைக்ரோ, மேக்ஸ்கேன், சைமன்டெக், கேஸ்பர்ஸ்கை, மெக்கேஃபீ போன்ற ஆன்லைன் வலைத்தளங்களின்  மூலம் எளிதாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தின் உள்ள ட்டூல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து, வைரஸ் பாதிப்பு உள்ள கம்ப்யூட்டரில் யூஎஸ்பி ட்ரைவ் அல்லது சிடி பயன்படுத்தி காப்பி செய்து, ஆலூரியான் வைரஸினை எளிதாக அகற்றலாம்.
Share:

விண்டோஸ்-8 இயங்குதளம் வெளியீடு! மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு!

புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.

இந்த கண்காட்சி 12-ஆம் தேதி வரை நடை பெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது.

இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும் போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.

ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும். விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
Share:

தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக்கும் வசதி!


பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றால் அந்த நேரம் பெற்றோர்கள் அடையும் துன்பத்திற்கும் பரபரப்பிற்கும் அளவே இருக்காது. அப்படிப்பட்ட துயராமான தருணத்தை போக்குவதற்காக ஒரு புதிய அப்ளிகேசன் வர இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அதன் மூலம் அவர்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி திரும்பியது.
இந்த பேமிலி ட்ராக்கரைப் போல ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன. அதன் மூலம் தொலைந்து போன தங்களது அன்புக்குரியவர்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
பேமிலி ட்ராக்கரை உருவாக்கியவரான ராபர்டோ ப்ரான்சஸ்டி கூறும் போது, இந்த பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் மூலம் நமது தொலைந்து போன உறவினர்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றி கூறுகிறார். மேலும் இந்த அப்ளிகேசனுக்கு உலக அளவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கூறுகின்றார்.
இந்த அப்ளிகேசன் மூலம் தொலைந்து போன தங்களது குழந்தைகளின் இடத்தைக் கண்டு பிடிக்க முடியும். அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அதுபோல் அவர்களின் மொபைல்களுக்கு ரிமோட் மூலம் அலார்மை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த சேவையை வெப் மூலமாக பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் வசதி கொண்டவை. மேலும் இந்த பேமிலி ட்ராக்கர் 2 வாரங்களுக்கான டேட்டா பேசையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களாக தொலைந்து போன குழைந்தை எங்கே இருந்தது மற்றும் என்ன செய்தது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேசன்களில் உள்ள குறைகளைவிட இதில் ஏராளமான நிறைகள் உள்ளன. இந்த அப்ளேகேசனைப் போன்ற கடந்த வருடம் ஜப்பானில் சுனாமி வந்த போது லைப்360 என்ற அப்ளிகேசன் உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிகேசன் காணாமல் போன பலரையும் இணைத்து வைத்தது.
Share:

பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்!


ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும்.
சாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.
Share:

ஸ்மார்ட்போன்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள்!


கூடிய விரைவில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சைபர் குற்றவாளிகள் குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்போதெல்லாம் அதிகமான தகவல்கள் ஸ்மார்ட்போன்களின் மூலம் பரிமாறி கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் தேவையான தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி வந்தது போய், இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகின்றனர்.
ஏனெனில் கம்ப்யூட்டரில் பெற்ற வசதிகள் அனைத்தும், இன்று ஸ்மார்ட்போன்களிலேயே பெற முடியும் என்ற வசதி தான் காரணம். உதாரணத்திற்கு முக்கிய சம்பவங்கள் பற்றி எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக கம்ப்யூட்டர்களில் பரிமாறி கொள்வது போன்ற வசதிகளும் உருவாகி
வருகின்றன.
அது மட்டுமல்லாமல் வங்கிக்கு பண பரிமாற்றங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில், நிறைய பாஸ்வேர்டு மற்றும் வங்கி அக்கவுன்டு நம்பர் போன்ற முக்கியமான தகவல்கள் இப்போது ஸ்மார்ட்போன்களிலேயே பரிமாறி கொள்கின்றனர்.
தொழில் நுட்ப சவுகரியங்களை வழங்கும் கம்ப்யூட்டர்களின் வசதிகள் இப்போது உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் பெற முடிகிறது. இதனால் சைபர் குற்றவாளிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ள பாஸ்வேர்டு போன்ற முக்கிய தகவல்களை திருட முற்பட்டால் இதன் மூலம் பெரிய பாதிப்பு இருக்கும்.
சமீபத்தில் தான் உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரசை ஹேக்கர்கள பரப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூகுள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதிலும் பெரும்பாலான மக்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்துகின்றனர். அதிலும் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், இந்த இயங்குதளத்தினை சைபர் குற்றவாளிகள் எளிதாக தாக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் என்று கூட சொல்லலாம்.
Share:

உலகின் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு! பரபரப்பு தகவல்!


2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வைரஸ் மூலம் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக ஓர் பரபரப்பு ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
சமீபமாகவே கம்ப்யூட்டர் ஹேக்கிங், வைரஸ் பாதிப்பு என்று பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதை தொடர்ந்து ஆலுரியான் என்ற வைரஸை பரவுவதன் மூலம் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரஸை சைபர் குற்றவாளிகள் பரப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூகுள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த ஆலுரியான் வைரஸ் மூலம் 2 லட்சத்தி 45 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாது அமெரிக்காவில் ஆலுரியான் வைரஸ் மூலம் 45 ஆயிரத்தி முன்நூற்றி 55 கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.
இப்படி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை, இனி வெளியாகும் செய்திகள் முலம் தான் பார்க்க வேண்டும்.


உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரசை ஹேக்கர்கள் பரப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை சரிசெய்து தருவதாக, ஹேக்கர்கள் மூலம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தினால் இந்த கம்ப்யூட்டர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் அம்பலமாகி உள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை 3 லட்சத்தி 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்மந்தமாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப்பிஐ), வைரஸ் பாதிப்பிலிருந்து கம்ப்யூட்டர்களை பாதுகாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டது.
கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்யும் வழியினையும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஏற்படுத்திய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த பாதுகாப்பு இணையத்தை மூடுவதற்கு எப்பிஐ முடிவு செய்துள்ளது. இதனால் புதிய வைரசால் இணையதளங்கள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக கூகுள் எச்சரித்துள்ளது.   
Share:

பார்வையாளர்கள்

About