Educational Welfare.

Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 23- ஆம் ஆண்டு துவக்க விழாவும்.. நிர்வாகிகள் தேர்வும்....

 

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

AL AMEEN DUBAI JAMATH.

 

அல் அமீன் துபை ஜமாஅத். [ஐக்கிய அரபு அமீரகம்.]

 

குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.  [ஸஹீஹுல் புகாரி - 5027]   

 

                                                                                                                               நாள்:– 30-03-2025

கண்ணியம் நிறைந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 23- ஆம் ஆண்டு துவக்கவிழாவும், நோன்பு பெருநாள் கோலாகல உறவுகள் சந்திப்பு நிகழ்சியும்  30/03/2025 ஞாயிற்றுக்கிழமை عيد الفطر  ஈதுல் பிfத்ர் நோன்பு பெருநாள் அன்று காலை 11.30 மணி அளவில்  துபை [JABIL] ஜபில் பார்க்கில் வைத்து நடைபெற்றது. இவ்வுறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து உறவுகளும் பரவலாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இச்சபை கூட்டத்திற்கு  தலைவராக மதிப்பிற்குரிய அருளாச்சி S. ஜலாலுதீன் அவர்கள் பொறுப்பேற்க  மதிப்பிற்குரிய  General Administrator v. கமால் மைதின். BE அவர்கள். அவர்கள் அதனை வழி மொழிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மவ்லானா S. முஹ்யித்தின் ஆலிம். அவர்கள் கிராஅத்  ஓதி இச்சபையை இனிதே துவங்கி வைத்தார்கள்..

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது அதில் கீழ் காணும் நபர்கள் நம் சபையின் பொறுப்புதாரிகளாக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 

தலைவர்                   :       P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  

துனைத் தலைவர்          :     N.முகம்மது கனி குட்டி (சோலைசேரி)

செயலாளர்                 :     மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)  

உதவி செயலாளர்         :     M.மைதீன் மேத்தபிள்ளை (மேல மருதப்பபுரம்)

பொருளாளர்                :      M. செய்யது மலுக்கு மேத்தா (வெள்ளானைக் கோட்டை) 

துனைப் பொருளாளர்            :      M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 

தொலைத் தொடர்பு தகவலர் :    S. செய்யது முகமது பட்டாணி (வாசுதேவநல்லூர்)

செயற்குழு உறுப்பினர்கள் :     A. முக‌ம்மது திவான்ஷா (வாசுதேவநல்லூர்)        M. செய்யது இப்ராஹிம் [RTA] [சங்கரன் கோவில்] M. திவான் அலி (வாசுதேவநல்லூர்) V. நசுருதீன் [ஆத்துவழி]. S.செய்யது பட்டாணி [ஊத்துமலை]  M.முகம்மது ரபீக் (வெள்ளானை கோட்டை)                                              M. அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர்)  

கல்விக் குழு:      பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் [அருளாச்சி] S.முகமது அலி ஜின்னா [அருளாச்சி] S.அப்துல் காதிர் (வாசுதேவநல்லூர்) ஆகீயோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதனை மகிழ்வுடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்..

தங்களுடைய மண்டல பொறுப்புதாரிகளை தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

1. Abu Dhabi -. ஜனாப்  S. ஹபீப் மைதீன். [ஊத்துமலை] , முகைதின் ஓலி (வாசுதேவநல்லூர்) அவர்கள். 

2. Sharjah -  ஜனாப்  முஹமது நவாஸ் காகா [சென்னை] அவர்கள். 

3. Dubai - Deira -  ஜனாப் S.செய்யது அலி பாதுஷா என்ற செல்லவாப்பா (ஊத்துமலை) அவர்கள்.

4. Dubai - Al Quoz - ஜனாப் M. முக‌ம்மது மைதீன் (வாசுதேவநல்லூர்) அவர்கள்.

5. Dubai - Al Qusais - ஜனாப். M. செய்யது இப்ராஹிம் [RTA] [சங்கரன் கோவில்] அவர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள  Location-னில் தங்களின் இருப்பிடத்திற்கு மிக அருகில் எந்த‌ Location இருக்கிறதோ அவரே உங்களுடைய மண்டல பொறுப்புதாரியாக ஆகுவார்.

 

 

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈••• •••••┈┈┈┈┈┈┈┈┈┈•••

 

 

Share:

புனித ரமலான் மாத‌ மார்க்க‌ கேள்வி - பதில் - போட்டிக்கான‌ செய்தி:-

 ~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈

சுற்றறிக்கை செய்தி [Circulaire Notice] - 02.


*Subject:* _புனித ரமலான் மாத‌ மார்க்க‌ *கேள்வி - பதில்* - போட்டிக்கான‌ செய்தி - 2025:-_

புனித ரமலான் மாத‌ மார்க்க‌ *கேள்வி - பதில்* - போட்டியிக்கான‌ *நோக்கம் - சிறப்பு - நிபந்தனைகள்* பற்றி தங்களுக்கு தெளிவுபடுத்தி விளக்கப்படுத்தப்படுகிறது.

🌷 *மார்க்க‌ கேள்வி - பதில் போட்டியின் நோக்கம் :-*

✍🏻 *அன்பிற்குரிய உறவுகளே!!* இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலானில் நாம் அதியமான நன்மைகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டியும், நன்மையான‌ மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த இஸ்லாமிய கேள்வி - பதில் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 💐💐

🌷 *மார்க்க‌ கேள்வி - பதில் போட்டியின் சிறப்பு :-*

நோன்பின் காலங்களில் அதிகமாக அமல் செய்வதற்கு நோன்பின் பழாயில்கள் சம்பந்தமான இல்மும், நோன்பின் காலங்களில் தீமைகள் செய்யாமல் இருக்க நோன்பை முறிக்கும் மஸாயில் சம்பந்தமான இல்மும், தேவைப்படுகிறது. ஆக இந்த மார்க்க‌ *கேள்வி - பதில்* போட்டியின் மூலம் நம் நோன்பினை மாண்பாக்கிட முடியும்.

✍🏻 *அன்புள்ளவர்களே!* ஸஹாபாக்கள் நன்மையில் போட்டி போட்டு இறை நெருக்கம் பெற்றது போல் நாமும் ரமலானில் நன்மையில் போட்டி போட தயாராகுவோம். 💐💐

🌷 *மார்க்க‌ கேள்வி - பதில் போட்டியின் நிபந்தனைகள்:-*

1. ரமலான் மாத முப்பது நாட்களிலும் [ஒரு நாளுக்கு ஒரு கேள்வி வீதம்] 30 கேள்விக‌ள் கேட்கப்படும்.

2. ஒரு கேள்விக்கு நான்கு சாய்ஸ்கள் கொடுத்து அதற்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்குமாறு கொடுக்கப்பட்டிருக்கும்.

3. பதில் அளிக்கக் கூடிய நபர் நான்கு சாய்ஸ்களில் எது சரியானதோ? அதனில் ஒரு பதிலை மட்டும் ஜுஸ் பண்ண வேண்டும். பதிலளிக்கக் கூடிய நபர் இரண்டு பதிலளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.

4. கேட்ட‌ கேள்விக்கு தவறாக பதிலளித்தாலோ, பதில் அளிக்காமல் விட்டு விட்டாலோ, மதிப்பெண் கிடையாது சரியான பதிலை அளித்தால் மட்டுமே அவருக்கு மதிப்பெண் கொடுக்கப்படும்.

5. இக்குழுவில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்போட்டியில் கலந்து கொண்டு. பரிசு பெற தகுதியானவர்களாக ஆக முடியும்..

6. நம்ம‌ வாட்ஸ் அப் *WhatsApp* குருப்பில் நம் சபையோரின் புதிதாக யாரேனும் இணைய வேண்டுமானால் மதிப்பிற்குரிய தகவல் தொடர்பு பொறுப்பாளர் M.அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர் அவர்களையும், மதிப்பிற்குரிய துணைச் செயலாளர் *M. நாகூர் ஹனிஃபா* (சோலைசேரி) அவர்களையும், தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.


7. சோதனைக்காக கீழே ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது இது மாதிரியான தொகுப்பு தினந்தோறும் வெளியாகும். 💐💐 இன்ஷா அல்லாஹ்.

8. இன்ஷா அல்லாஹ் தினந்தோறும் காலையில் 10 மணிக்குள் ஒரு கேள்வி வெளியாகும். அந்நாள் அஸர் வரைக்கும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க டைம் கொடுக்கப்படும். இவ்வாறு தினந்தோறும் தாங்கள் தரும் பதிலினை சேமித்து வெற்றி வாகை சூடுபவருக்கு ஈது பெருநாளன்று இறுதியில் பரிசு வழங்கப்படும்.

9. நாம் கேட்ட‌ கேள்விக்கு ஒரு நபர் சரியான பதிலளித்து இருக்கிறார்களா? என்பதனை தாங்கள் ஆய்வு செய்து தங்களின் பதிலை சரியாக அளிக்குமாறு நினைவூட்டப்படுகிறது. ஏனென்றால்; ஒருவர் ஒரு பதிலை அளித்தால் எல்லோரும் அதே பதிலை அளிக்காமல் அவர் அளித்துள்ள பதில் சரியானதா? என்பதை ஆய்வு செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற அனைவரையும் வாழ்த்தி வளர‌ துஆ செய்கிறோம்.

*இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார்* நிகழ்சிக்கு. - ஸ்பான்சர் செய்யக் கூடியவர்கள் விரைவில் ஸ்பான்சர் செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. நம் சபையின் தலைவரிடமோ, பொருளாளரிடமோ, முன்பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. நோன்பு திறக்க உதவி செய்யுங்கள் அந்நோன்பாளியின் துஆக்களை பெறுங்கள். என்று நினைவூட்டப்படுகிறது.

தங்களின் முழு ஒத்துழைப்பிற்கும், தங்களுடைய முழு ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வஸ்ஸலாம். 🫂🫶🏻💐🤲🏻

இப்படிக்கு:-
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.


மேலதிக தகவலுக்கு:-

https://alameendubaijamath.blogspot.com/2025/02/blog-post_22.html
Share:

பார்வையாளர்கள்

About