Educational Welfare.

பரக்கத்தான பராஅத்துடைய‌ சுன்னத்தான‌ நோன்பை நோற்க தயாராகுவோமா?...

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

*Subject:*  _பரக்கத்தான பராஅத்துடைய‌ சுன்னத்தான‌ நோன்பை நோற்க தயாராகுவோமா?...._


✍🏻.அன்புள்ளவர்களே! நாமெல்லாம் ரமலானுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். இன்னும் புனித ரமலான் மாதத்தை அடைய 17 நாட்களே உள்ளன. புனித البراءة பராஅத் இரவை அடைய இன்னும் 02 நாட்களே உள்ளன.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய‌ *வியாழக்கிழமை 13-02-2025* அன்று  *அமிரகத்திலும் & தாயகத்திலும்* பராஅத்துடைய‌ இரவாகும்.. ஆதலால்  13-02-2025 வியாழக்கிழமை இரவில் ஸஹர் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை பகலில் நோன்பிருக்க வேண்டும்.

அவ்விரவை ليلة المبارك லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), ليلة الرحمة லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), ليلة البراءة லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும். *[ரூஹூல் பயான் பாகம்-13 பக்கம்-110, 111]* 

✍🏻 அன்புள்ளவர்களே! பராஅத் இரவுடைய அன்றைய நாளை அமல்களின் மூலம் அலங்கரிப்போமாக!.

இந்நாளில் நாம் அனைவரும்  நோன்பு வைக்க இருப்பதினால்  இந்நோன்பின் சிறப்பு & ஸஹர் & இப்தார் நேரங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

*நிய்யத்*  :-

பராஅத்துடைய *சுன்னதான* நேன்பை அல்லாஹ்வுக்காக வைக்கிறேன்.

*இந்நோன்பின் சிறப்பு*  :-

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். *( நஸாயி 2357 , ).*

 *ஸஹர்  முடிவு* :-5:20 AM

*இப்தார்  முடிவு* :- 6:16 PM

*இப்படிக்கு:-
தகவல் தொடர்பு 
(அல் அமீன் துபாய்)

மேலதிக தகவலுக்கு:-

http://alameendubaijamath.blogspot.com/2025/02/blog-post.html
Share:

1 comment:

  1. ”1. வளமான ரிஸ்க் – வாழ்வாதாரம். 2. அதை அனுபவிப்பதற்கு தேவையான ஆரோக்கியமான நீண்ட ஆயுள். 3. நோய் நொடிகள், கஷ்டங்கள், துன்பங்கள், ஆபத்துகள் இல்லாத சூழ்நிலை.” ஆகியவைகளாகும்.

    ReplyDelete

பார்வையாளர்கள்

About