~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
சுற்றறிக்கை செய்தி [Circulaire Notice] - 02.
புனித ரமலான் மாத மார்க்க *கேள்வி - பதில்* - போட்டியிக்கான *நோக்கம் - சிறப்பு - நிபந்தனைகள்* பற்றி தங்களுக்கு தெளிவுபடுத்தி விளக்கப்படுத்தப்படுகிறது.
🌷 *மார்க்க கேள்வி - பதில் போட்டியின் நோக்கம் :-*
✍🏻 *அன்பிற்குரிய உறவுகளே!!* இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலானில் நாம் அதியமான நன்மைகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டியும், நன்மையான மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த இஸ்லாமிய கேள்வி - பதில் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 💐💐
🌷 *மார்க்க கேள்வி - பதில் போட்டியின் சிறப்பு :-*
நோன்பின் காலங்களில் அதிகமாக அமல் செய்வதற்கு நோன்பின் பழாயில்கள் சம்பந்தமான இல்மும், நோன்பின் காலங்களில் தீமைகள் செய்யாமல் இருக்க நோன்பை முறிக்கும் மஸாயில் சம்பந்தமான இல்மும், தேவைப்படுகிறது. ஆக இந்த மார்க்க *கேள்வி - பதில்* போட்டியின் மூலம் நம் நோன்பினை மாண்பாக்கிட முடியும்.
✍🏻 *அன்புள்ளவர்களே!* ஸஹாபாக்கள் நன்மையில் போட்டி போட்டு இறை நெருக்கம் பெற்றது போல் நாமும் ரமலானில் நன்மையில் போட்டி போட தயாராகுவோம். 💐💐
🌷 *மார்க்க கேள்வி - பதில் போட்டியின் நிபந்தனைகள்:-*
1. ரமலான் மாத முப்பது நாட்களிலும் [ஒரு நாளுக்கு ஒரு கேள்வி வீதம்] 30 கேள்விகள் கேட்கப்படும்.
2. ஒரு கேள்விக்கு நான்கு சாய்ஸ்கள் கொடுத்து அதற்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்குமாறு கொடுக்கப்பட்டிருக்கும்.
3. பதில் அளிக்கக் கூடிய நபர் நான்கு சாய்ஸ்களில் எது சரியானதோ? அதனில் ஒரு பதிலை மட்டும் ஜுஸ் பண்ண வேண்டும். பதிலளிக்கக் கூடிய நபர் இரண்டு பதிலளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
4. கேட்ட கேள்விக்கு தவறாக பதிலளித்தாலோ, பதில் அளிக்காமல் விட்டு விட்டாலோ, மதிப்பெண் கிடையாது சரியான பதிலை அளித்தால் மட்டுமே அவருக்கு மதிப்பெண் கொடுக்கப்படும்.
5. இக்குழுவில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்போட்டியில் கலந்து கொண்டு. பரிசு பெற தகுதியானவர்களாக ஆக முடியும்..
6. நம்ம வாட்ஸ் அப் *WhatsApp* குருப்பில் நம் சபையோரின் புதிதாக யாரேனும் இணைய வேண்டுமானால் மதிப்பிற்குரிய தகவல் தொடர்பு பொறுப்பாளர் M.அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர் அவர்களையும், மதிப்பிற்குரிய துணைச் செயலாளர் *M. நாகூர் ஹனிஃபா* (சோலைசேரி) அவர்களையும், தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
8. இன்ஷா அல்லாஹ் தினந்தோறும் காலையில் 10 மணிக்குள் ஒரு கேள்வி வெளியாகும். அந்நாள் அஸர் வரைக்கும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க டைம் கொடுக்கப்படும். இவ்வாறு தினந்தோறும் தாங்கள் தரும் பதிலினை சேமித்து வெற்றி வாகை சூடுபவருக்கு ஈது பெருநாளன்று இறுதியில் பரிசு வழங்கப்படும்.
9. நாம் கேட்ட கேள்விக்கு ஒரு நபர் சரியான பதிலளித்து இருக்கிறார்களா? என்பதனை தாங்கள் ஆய்வு செய்து தங்களின் பதிலை சரியாக அளிக்குமாறு நினைவூட்டப்படுகிறது. ஏனென்றால்; ஒருவர் ஒரு பதிலை அளித்தால் எல்லோரும் அதே பதிலை அளிக்காமல் அவர் அளித்துள்ள பதில் சரியானதா? என்பதை ஆய்வு செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற அனைவரையும் வாழ்த்தி வளர துஆ செய்கிறோம்.
*இனிக்கட்டும்.. இனிய உறவுகளோடு ஓர் இப்தார்* நிகழ்சிக்கு. - ஸ்பான்சர் செய்யக் கூடியவர்கள் விரைவில் ஸ்பான்சர் செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. நம் சபையின் தலைவரிடமோ, பொருளாளரிடமோ, முன்பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. நோன்பு திறக்க உதவி செய்யுங்கள் அந்நோன்பாளியின் துஆக்களை பெறுங்கள். என்று நினைவூட்டப்படுகிறது.
தங்களின் முழு ஒத்துழைப்பிற்கும், தங்களுடைய முழு ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வஸ்ஸலாம். 🫂🫶🏻💐✅🤲🏻


0 comments:
Post a Comment