~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நடக்க இருக்கும் 10th, 11th, 12th Public Exam - 2025 அரசுப் பொதுத் தேர்வுக்கான விழிப்புணர்வு செய்தி.
https://cmcwtrl.in/wp-content/uploads/2024/10/TN-Board-Public-Exam-Time-Table-2025.pdf
✅. அன்பு நிறைந்த உறவுகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ...…
இன்னும் ஒரிரு வாரங்களில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற உள்ளதால் நமது மஹல்லாவைச்சார்ந்த பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, படிக்கும் மாணவ மாணவியர்களின் மீது தனி கவனம் செலுத்தி அவர்கள் அதிக மதிப்பெண் பெற அல் அமீன் துஆ செய்கிறது.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை தங்களின் மஹல்லா சார்பாக செய்து தருமாறு தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவ - மாணவியர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்புகளின் விஷயத்தில் தனி கவனம் செலுத்துமாறும், தேர்வு முடியும் வரை அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், TV, செல் போன் ஆகியவைகளை கைப்பற்றி அவர்களின் மதிப்பெண் விஷயத்தில் அதிக ஊக்கம் தருமாறும், தனி கவனம் செலுத்துமாறும், அனைத்து பெற்றோர்களிடத்திலும் அன்பாக கேட்டுக் கொள்கிறது.
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் சில தேர்வுகள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ நாட்களிலும், ரமலான் மாத நோன்பு நாட்களிலும் வருவதால் நமது மஹல்லாவில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என ஆராய்ந்து ஜமாஅத் நிர்வாகம் அவர்களும் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு ஜமாஅத் நிர்வாகிகளிடத்தில் அல் அமீன் அன்பாக கேட்டுக் கொள்கிறது.
குறிப்பு: கடந்த வருடங்களை போல இந்த வருடம் முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மானவர்களுக்கு நம் அல் அமின் ஜமாஅத் சார்பாக கண்ணியப்படுத்தி கௌரவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
எல்லா வல்லமை மிக்க இறைவன் நம் அனைவருக்கும் பரக்கத்தையும், நலமான, வளமான வாழ்கையையும், தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻

0 comments:
Post a Comment