Educational Welfare.

2025 - ஜனவரி மாத நமது மன்றத்தின் செயல்பாடுகள்:-

 ~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈


Subject:  தேர்தல் பணிக்குழு ஏற்படுத்துதல் + இன்ஷா அல்லாஹ் வருகிற‌ [பிப்  01] - ஆம் தேதி  மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்சியின் பெயர்  ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பின் கீழ் நாம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தபடவுள்ளது. :-* 

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி  பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐

✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! நமது மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி நம்முடைய உறவுகளையும், நம்முடைய நட்புகளையும், நம்முடைய அமல்களையும்  அவ்வப்போது புதுப்பித்து வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இப்போது போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும், அமல்களோடும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன்.

✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!!   நமது மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நல்ல.. நல்ல... தலைப்பின் கீழ் நடத்தி அசத்தி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். 

கடந்த  [ஜன  04] அன்று நடந்த‌ நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த மாத உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை எங்கு வைக்கலாம்? என்று மஷ்வராஹ் கேட்கப்பட்டது. அப்போது; எல்லா உறவுகளும் ஒருமன‌தாக‌ ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பின் கீழ் நாம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியினை பிப்ரவரி மாத முதல் சனிக்கிழமையான‌ 01-02-2025  இஷா தொழுகைக்குப் பிறகு CenterPoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி  நடத்தலாம் என‌ முடிவு செய்யப்பட்டது. அந்த செய்தியும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! அடுத்ததாக வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி தற்போது இருக்கும் நிர்வாகத்தின் கடைசி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியாகவும், இந்த வருடத்தின் கடைசி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால்; புனித ரமலான் மாதம் எதிரே வருவதனால் இரண்டு மாதங்களுக்கு உறவு சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.  தற்போது இருக்கக்கூடிய நிர்வாகம் இந்த ஒரு வருடத்தை கடக்கக்கூடியதாக இருப்பதினால் இப்போது இருக்கக்கூடிய நிர்வாகத்தினுடைய கடைசி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியாக‌ கருதப்படுகிறது ஆதலால் அனைவரும் தவறாது அவசியம் கலந்து சிறபித்து தருமாறு அழைக்கப்படுகிறது. 

இந்த உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை தற்போது இருக்கும் நிர்வாகத்தின் இறுதியாக கணிக்கப்படுவதினால் மண்டல பொறுப்புதாரிகளுக்கும் பொருளாளர், துணைப் பொருளாளர், அவர்களுக்கு  outstanding (நிலுவையில் உள்ள சந்தா பாக்கி தொகை) விஷயமாக கணக்கெடுத்து அதனை விரைவில் தீர்க்குமாறு முடக்கி விடப்பட்டு & அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய மாதாந்திர சந்தாக்களை தாங்களாகவே மனமுவ‌ந்து கண்ணியமாக கொடுத்திட நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதுபோல செயலர் மற்றும் துணை செயலர் அவர்களை இந்த ஓராண்டினுடைய மன்ற செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பிக்க முடக்கி விடப்பட்டு & அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

 கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னால் இறந்த  Abu Dhabi  மண்டல பொறுப்புதாரியான‌ N.முகம்மது கனி  குட்டி  (சோலைசேரி)  அவர்களின் சகோதரியின் மகன் மர்ஹும் முகம்மது இஸ்மாயில் (பட்டானி)  அவர்களின் இறப்பு செய்தி நம் அனைவருக்கு ஆழ்ந்த சோகத்தை தந்திருக்கிறது. அவர்களுக்காக வேண்டி நம் மன்றம்:- 

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவானாக! அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!! ஆமீன்..   அல்லாஹ் ﷻ அவர்களை எவ்வித கேள்வி கணக்கின்றி சிரித்த முகத்துடன் சுவனத்தில் நுழைய வைப்பானாக...!!  ஆமீன்... என்று துஆ செய்கிறது. 

அது மட்டுமல்ல; வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்களுக்காக யாசின் ஓதி துஆ செய்ய நிர்வாகக் குழு முடிவு செய்திருக்கிறது. 

தேர்தல் பணிக்குழு ஏற்படுத்துதல்

தற்போது இருக்கக்கூடிய நிர்வாகத்திற்கு பதவிக்காலம் முடிய இருப்பதினாலும், அடுத்து பதவி ஏற்பதற்கு நிகழ்வுகள் நடத்த இருப்பதனாலும் தேர்தல் பணிக்குழு ஏற்படுத்த முயற்சிகள் நடைமுறைக்கு வந்தது.

இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களில் இதே நிர்வாகம் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை வருவதற்கு செயலராகிய‌ நான் தேர்தல் பணிக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறேன்.

மற்ற செய்திகளை நான் ஓய்வு நேரத்தில் தெரியப்படுத்துகிறேன் எனக்காக வேண்டி துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

மேலும் இன்னும் ஒன்று இரண்டு தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டன நான் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு விரிவாக தெரியப்படுத்துகிறேன்.  

இப்படிக்கு:-
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.


~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈

Subject:  இன்ஷா அல்லாஹ் வருகிற‌ _[பிப்  01] - ஆம் தேதி  மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பின் கீழ் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முன்னெடுப்புகள் துவங்கின:-

கடந்த மாத ஆலோசனையின் பிரகாரம் point number 1️⃣. processing starts now...

 பிப்ரவரி மாத உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி தற்போது இருக்கும் நிர்வாகத்தின் கடைசி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியாக  கருதப்படுவதினால் அதற்கு  இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் எல்லா நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்திட‌ அதனுடைய பொறுப்புதாரிகளுக்கு அதனுடைய நிகழ்ச்சி நிறைவுகளை விரைவுபடுத்த துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

வருகிற‌ _*பிப்  01] - ஆம் தேதி  மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்சியில் பேசப்பட இருக்கும் முக்கிய விஷயங்கள் பற்றிய‌ துணுக்கு 2️⃣ செய்திகள்:-* 

✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!!  நம் சபையின் பொருளாளரும், மண்டல பொறுப்புதாரிகளும் நிர்வாக குழுவிற்கு கொடுத்த complaint முறையீடு பிரகாரம் இவ்வறிவிப்பு அறிவிக்கப்படுகிறது.

1️⃣. தற்போது அமீரகத்தில் இருக்கும் நம் சபைக்கு உட்பட்ட உறுப்பினர்களான உறவுகளில் 13 நபர்கள் எந்த ஒரு உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எந்த ஒரு சந்தாக்களையும் இந்த ஒரு வருடத்தில் கொடுக்கவில்லை. இந்த 13 நபர்களும் இந்த பத்து நாட்களுக்குள் தங்களுடைய சந்தாக்களை கொடுத்து உறுதியாக உறுப்பினராக ஆக புதுப்பிக்குமாறு தங்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இந்த விஷயத்தில் தவறும் பட்சத்தில் வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இவர்களின் சம்பந்தமாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும். 

நீங்கள் நெருங்கிய உறவினராக இருப்பின் நிர்வாகம் என்று வருகின்ற பொழுது அனைவரும் சமம் தான் அதனால் இந்த விஷயத்தில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு நல்கிட‌ கேட்டுக்கொள்கிறோம். நிர்வாகம் எந்த ஒரு தீர்மானம் எடுத்தாலும் அதற்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்று அல்-அமின் அந்த 13 நபரிடம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது. [அந்தப் 13 நபர்கள் யார்? யார்? என்பதனை அறிய செயலர் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இதே மெசேஜ் அனுப்புவார்.]

* இன்று போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன்.

2️⃣. தேர்தல் பணிக்குழு ஏற்படுத்துதல் + நிர்வாகத் தேர்தல் சம்பந்தமாக‌ இந்த ரமலான் ஈது பெருநாளில் வைத்துக் கொள்ளலாமா? இல்லை பக்ரீத் ஈது பெருநாளில் வைத்துக் கொள்ளலாமா? இது  சம்பந்தமாக‌ முக்கிய ஆலோசனை வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. 

மேலும் புதிய நிர்வாகம் தொடங்குதல் சம்பந்தமான மஷ்வராவும் இதில் இருக்கிறது. 

இன்னும் தலைவரின் அனுமதியுடன் சில விஷயங்களை பேச வேண்டியது இருக்கிறது அனைவரும் அவசியம் வருக இதற்கான முன்னெடுப்புகள் தற்போது துவங்கியன..

பொறுப்புதாரிகளுக்கு கிழ்காணும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்று அறிவிக்கப்படுகிறது.

தற்போது இருக்கக்கூடிய நிர்வாகத்தினுடைய இது கடைசி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியாக கருதப்படுவதனால் நிர்வாகிகளுக்கு கூடுதல் பொருப்புகள் கொடுக்கப்பட்டு அனைவரையும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 

செயலர், துணை செயலாளர் அவர்களை வருடாந்திர செயல்பாடு செயலாக்க அறிக்கையை வருகிற‌ உறவுகள் சந்திப்பில் சமர்ப்பிக்கும் படி மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தப்படுகிறது. 

பொருளாளர், துணைப் பொருளாளர் இவர்கள் இந்த ஓராண்டினுடைய வரவு - செலவு கணக்குகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வருகிற‌ உறவுகள் சந்திப்பில் சமர்ப்பிக்கும் படி மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

கண்ணியத்திற்குரிய தாயக பொறுப்புதாரி அவர்களுக்கு இந்த ஓராண்டினுடைய கல்வி ஊக்கத்தொகை சம்பந்தமாக‌ வரவு - செலவு கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு தாயக‌பொறுப்புதாரி ஆலிம் அவர்களுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. 

  இன்ஷா அல்லாஹ் வருகிற‌ _[பிப்  01] - ஆம் தேதி  மாதாந்திர உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியில் எல்லா உறவுகளும் ஒரு உறவு கூட விடுபடாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை  நிர்வாக குழு சார்பாக‌ அழைக்கின்றோம். Everyone, thank you for your support. 🫂🫂

தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி  பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐

எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast.

இப்படிக்கு 
அழைப்பின் மகிழ்வில் 
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 
துணைச் செயலாளர்..

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

Subject:  இன்ஷா அல்லாஹ்  வருகிற [பிப்  01] - ஆம் தேதி மாதாந்திர‌ உறவுகள் சந்திப்பு நிகழ்சியை "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பின் கீழ் நடத்த‌  முன்னெடுப்புகள் தீவிரமான தொடங்கிய‌ இந்நிலையில்  சின்ன சின்ன துணுக்கு 8️⃣ செய்திகள்:- 

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி  பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐

1️⃣.மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி சம்பந்தமான உறுதியான அறிவிப்பை பெற தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக காத்திருப்பில் இருக்கிறது.

தலைவரின் உறுதியான அறிவிப்பு வந்ததும் நம் சபையின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் உறுதியான‌ அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  💐💐.  இன்ஷா அல்லாஹ்..

2️⃣.இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய  [பிப்  01] - ஆம் தேதி உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு  இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உணவு கொடுக்கக்கூடிய  கண்ணியத்திற்குறிய  _____ அவர்களுக்கு அல்லாஹ் [ﷻ] அவருடைய எல்லா ஹலாலான ஹாஜத்துகளையும், நிறைவேற்றி நீ.........ண்ட நிம்மதியான, சுகமான‌ வாழ்கையை ஈருலகிலும் தந்தருள்வானாக‌!! ஆமீன். என்று நம் சபை துஆ செய்கிறது. 🤲🤲


3️⃣. நாளை இந்தியா முழுவதும்  76-th Republic Day [குடியரசு தினம்] கொண்டாடப்பட உள்ளது.  தாயகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உறவுகளுக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை நம் சபை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். 💐💐🫂

தாய் மீதான பாசம்
போன்றதே தாய் நாட்டின்
மீதான பாசமும்...

தாயை நேசிப்போம்
தாய் நாட்டை
மூச்சாய் சுவாசிப்போம்..

வந்தே மாதரம்!
குடியரசு தின வாழ்த்துக்கள்... 💐💐


4️⃣. அன்பிற்குரிய உறவுகளே!! நாளை ம‌ஃரிப் தொழுகைக்கு பிறகு அமீரகத்தில் معراج மிஃராஜ் இரவாக கணிக்கப்படுவதினால் அனைவரும் அந்நாளை அமல்களின் மூலம் அலங்கரிப்போமாக! . ஆமீன். என்று நினைவுபடுத்த‌ப்படுகிறது. 💐🤲🏻🤲🏻💐💚🫂.  

5️⃣. தற்போது அமிரகத்தில் கடுமையான‌ குளிர் காலமாக இருப்பதினால் உறவுகள் அனைவரும் தங்களுடைய உடல் நிலைகளை சரிவர‌ பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

6️⃣. உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் தாமதமாக வருவதினால் நம்மின் நிகழ்ச்சி நிரலே தடம் மாறி செல்கிறது ஆதலால் குறிப்பிட்ட நேரத்தில் வருவதற்கு முயற்சி செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது.  

7️⃣  நமது உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இதுவரை 13 உறவுகள் எந்த நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களை முழுமையாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும், சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் இறந்த நம் உறவுகளுக்கு நம் மன்றத்தின் சார்பாக காயிப் ஜனஸா தொழுகை நடத்தவும், யாசின் ஓதி துஆ செய்யுமாறும் நடத்தி நன்மைகள் சேர்த்து வைக்க நிர்வாக குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8️⃣.இந்த வாட்ஸ் அப் WhatsApp குருப்பில் நம் சபையோரின் எல்லா உறவுகளும் மொபைல் நம்பரும் இதில் இருக்கிறது. தேவையுடையோர்களின் நம்பரை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் குழுவில் புதிதாக யாரேனும் இணைய வேண்டுமானால்  மதிப்பிற்குரிய  தகவல் தொடர்பு பொறுப்பாளர் M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர் அவர்களையும், மதிப்பிற்குரிய துணைச் செயலாளர் M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்களையும், தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

 ✅.அன்பிற்குரிய உறவுகளே!! கடந்த இரண்டு மவ்த் ஆனவர்களுடைய உறவுகள் நிர்வாகத்திற்கு ஜனாஸா தொழுகை நடத்தவும், யாசின் ஓதி துஆ செய்யுமாறும் நிர்வாக குழுவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும் இவ்வுறவுகள் சந்திப்பு நிகழ்சி நிகழ்ச்சியில் ஐந்து விதமான விஷயங்களைப் பற்றி தீர்க்கமாக‌ பேசி முடிவெடுக்க இருப்பதினால் அனைவரும் அவசியம் வருக... ஆலோசனை தருக!! என நிர்வாக குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம். 

ஆதலால்  எல்லா உறவுகளும் ஒரு உறவு கூட விடுபடாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை  நிர்வாக குழு சார்பாக‌ அழைக்கின்றோம். Everyone, thank you for your support. 🫂🫂

எப்பவும் நம்ம தான் first. 
எப்பவும் நம்ம தான் Fast.

✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!!  இன்று போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன்.

இப்படிக்கு:- 
அழைப்பின் மகிழ்வில் 
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 
துணைச் செயலாளர்..

~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

Subject:  இன்ஷா அல்லாஹ்  வருகிற [பிப்  01] - ஆம் தேதி மாதாந்திர‌ உறவுகள் சந்திப்பு நிகழ்சியை "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பின் கீழ் நடத்த‌  முன்னெடுப்புகள் தீவிரமாக தொடங்கிய‌ இந்நிலையில்  நம் சபையின் தலைவரின் அனுமதியின் அடிப்படையில் தற்போது உறுதியாக அறிவிக்கப்படுகிறது.

 ✅. அன்பிற்குரிய உறவுகளே!!  இன்ஷா அல்லாஹ்  வருகிற‌ பிப்ரவரி மாத முதல் சனிக்கிழமை 01-02-2025  அன்று 7:30pm மணி அளவில்  இஷா தொழுகைக்குப் பிறகு CenterPoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து  நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பின் கீழ்  நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளும் ஒருதாய் பிள்ளைகளாக‌ சகோதரத்துவத்தோடு தவறாது கலந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்…

தங்களின் அக்கம் பக்கத்திலுள்ள நம் உறவுகளையும் இந்நிகழ்விற்கு அழைத்து வாருங்கள்.

நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை குறிப்பிடப்பட்ட‌ நேரத்தில் தொடங்கி குறிப்பிடப்பட்ட‌ நேரத்தில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

குறிப்பு :  இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எல்லா வல்லமை மிக்க இறைவன் இந்நிகழ்சியினை கபூல் செய்து இந்நிகழ்ச்சியின் மூலம் நம் அனைவருக்கும்  பரக்கத்தையும், நலமான, வளமான‌ வாழ்கையையும், தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻

இப்படிக்கு:- 
தகவல் தொடர்பு 
(அல் அமீன் துபாய்.)

இன்ஷா அல்லாஹ்  நாளை மறுநாள் பிப்ரவரி  01-02-2025 ஆம்தேதி சனிக்கிழமை  அன்று 7:30pm மணி அளவில்  இஷா தொழுகைக்குப் பிறகு CenterPoint Metro Sation அருகிலுள்ள‌  [Rashidiya] பூங்காவில் வைத்து  நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி புனித ரமலானை வரவேற்கும் முகமாக   நடைபெற உள்ளது.

 இச்சிற‌ப்பு மிகுந்த‌ நிகழ்விற்கு நம் உறவுகள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக, நம் உறவுகளில் ஒருவர் கூட விடுபடாமல் குறிப்பிட்டப்பட்ட நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு பேராவலுடன் அழைக்கின்றோம்.  Everyone, thank you for your support. 🫂🫂

இந்நிகழ்வில் A TO Z வரை எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக நடத்திட‌வும், முக்கிய மஷ்வராக்களையும், காயிபூ ஜனாஸா தொழுகையையும், நிர்வாக குழு  செம்மையாக முழு ஏற்பாடு செய்திருக்கிறது. மிஸ்பண்ணிடாதீக... 🤩🤭 

நாளைய ஜுமுஆவுடைய தொழுகையில்  நம்  உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக  நடைபெற உங்களுடைய துஆக்களில் இ[நி]ணைத்துக் கொள்ளுங்கள்.

நாம் அனைவரும் ஒரு தாய்பிள்ளைகளாக‌ சகோதரத்துவத்துடன் உறவுகளாக சந்திக்க இன்னும் ஒரு சில நாழிகைகள் தான்.. 🫂🫂_

இப்படிக்கு:- 
அழைப்பின் மகிழ்வில் 
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 
துணைச் செயலாளர்..


~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈

Subject:  நன்றி நவிலல் செய்தி  🤲🏻🤲🏻 

பாசத்திற்குரிய உறவுகளே!! நேற்று நடந்த  நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி எல்லோரும் புகழ்கின்ற அளவு புனித ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாகவும் புத்தூயிர் பெற்ற நிகழ்வாகவும்,  100 - க்கு 💯 % அதிக நன்மைகளும், பிரயோஜனங்களும், நிறைந்ததாகவும்,  இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அது மட்டுமல்லது; நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து ஒரு தாய் பிள்ளைகளாக சகோதரத்துவடனும், சமத்துவதுடனும்  நடந்து கொண்ட நம்முடைய பாச போராட்டம் எல்லையில்லாத, ஈடு இணை செய்யமுடியாத அளவில் அதிக மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ். இன்று போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன் என்று அல் அமின் துஆ செய்கிறது..

 கடந்த ஜனவரி மாதத்தில் இறந்த நம் உறவுகளுக்கு ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்தியும்,  குர்ஆன் ஹத்தம் செய்யும் நிகழ்வும், யாசின் ஓதி துஆ செய்யும் நிகழ்வும், மிகச் சிறப்பாக நடந்தது.  அல்ஹம்துலில்லாஹ். 

இந்த நிகழ்வில் எல்லா உறுப்பினர்களும்  ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும், குறிப்பிடப்பட்ட நேரத்தில்  கலந்து கொண்டு ஒருமித்து எல்லோரும் ஒரு கைகோர்த்து மன மகிழ்வோடு கொண்டாடியது பாரகல்லாஹ் என்று கூறும் அளவிற்கு  மிகப்பெரும் வெற்றியுடன் கூடிய‌ மகிழ்வை தந்தது. மாஷா அல்லாஹ்.

 இந்நிகழ்ச்சியை ஏற்படுத்திய நிர்வாகிகளுக்கும், கலந்து கொண்டு களப்பணியாற்றிய உறவுகளான உறுப்பினர்களுக்கும், உயர்தர‌  உணவு கொடுத்த ஸ்பான்ஸர்களுக்கும் நம் சபை சார்பாக கோடான கோடி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் 💐🫂🤲🏻 தெரிவித்துக் கொள்கிறோம். பாரக்கல்லாஹ்.

நேற்று நடந்த நிகழ்விற்கு ஒரு மதிப்பீடு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டால் நூற்றுக்கு 150 - மதிப்பென்னை எவ்வித குறைபாடு இன்றி கொடுப்பார்கள் என்று சொல்லும் அளவு perfect பர்ஃபெக்டாக இருந்தது.

நேற்று பேசப்பட்ட தீர்மானங்களை செயல்முறை அறிக்கைகளாக நான் விரைவில் சமர்ப்பிக்கிறேன். 💐

 எப்பவும் நம்ம தான் first. 

 எப்பவும் நம்ம தான் Fast._🫶🏻🫂💐💚

இப்படிக்கு:-
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

Share:

1 comment:

பார்வையாளர்கள்

About