ஊத்துமலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நமது சபையின் துணைத் தலைவர் : M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை) அவர்களின் தாயாரும், நமது சபையின் மூத்த உறுப்பினர்களாகிய நாகூரான் சாச்சா, காதர் சாச்சா [வெள்ளானைக்கோட்டை] அவர்களின் ஆச்சாவுமாகிய, மற்றும் நம் சபையோரின் ஆச்சாவாகிய *மர்ஹுமா காதர் பீவீ ஆச்சா* அவர்கள் 23/12/2024 திங்கட்கிழமையாகிய இன்று 4 மணியளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக!.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!.
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன்.ஆமீன்

انا لله وانا اليه راجعون
ReplyDeleteஅல்லாஹ் ﷻ அவர்களை எவ்வித கேள்வி கணக்கின்றி சுவனத்தில் நுழைய வைப்பானாக...!! ஆமீன்...