ஊத்துமலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நமது சபையின் செயலர் அவர்களின் மனைவியின் ஆச்சாவும், நம் சபையின் உறுப்பினர் இராமையன்பட்டி S.முகைதீன் ஹுசைன் அவர்களின் ஆச்சாவும், ஊத்துமலை மர்ஹும் மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய் காரப்பா) அவர்களின் மனைவியுமான, மற்றும் நம் சபையோரின் ஆச்சாவாகிய *மர்ஹுமா மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய்காரப்பா) அவர்களின் மனைவி சே.கமீது அம்மாள் என்ற முகமது ஹமீது பீவி* அவர்கள் 24/01/2025 வெள்ளிக்கிழமை ஆகிய இன்று அதிகாலையில் 3;30am மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஃஆ செய்யமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக!
இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
அன்னாரது குடும்பத்தாருக்கு மன அமைதியை தருவாயாக!
பொறுமையை தருவாயாக! ஆமீன். ஆமீன்..
இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஊத்துமலை மீராசாகிப் (ஷாஃபி) ஜுமுஆ பள்ளிவாசலில் வைத்து ஜனாஸா தொழுகை நடைபெறும். அதைத் தொடர்ந்து அவர்களின் மண்ணறை & மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்து நல்லடக்கம் செய்யப்படும்..
அவர்களின் மண்ணறை & மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்யுங்கள்.
அவர்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் பிழை செய்து இருந்தால் மன்னித்து அவர்களை மீது கருணை காட்டுங்கள்.
انا لله وانا اليه راجعون
அல்லாஹ் ﷻ அவர்களை எவ்வித கேள்வி கணக்கின்றி சிரித்த முகத்துடன் சுவனத்தில் நுழைய வைப்பானாக...!! ஆமீன்...
அல்ஹம்துலில்லாஹ் நமது ஆச்சாவிற்கு எந்தவித குறை இல்லாமல் இறுதி கடமைகளை இனிதாக நிறைவு செய்து விட்டோம் அல்ஹம்துலில்லாஹ்.
நாளை நடைபெற இருக்கும் கத்தபாத்திஹா ஆச்சாவின் குடும்பத்தினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னால் இறந்த [06-01-2025] Abu Dhabi மண்டல பொறுப்புதாரியான N.முகம்மது கனி குட்டி (சோலைசேரி) அவர்களின் சகோதரியின் மகன் மர்ஹும் முகம்மது இஸ்மாயில் (பட்டானி) அவர்களுக்கும், இன்று இறந்த [24-01-2025] ஊத்துமலை மர்ஹும் மீ.சேக் மைதீன் மரைக்காயர் (முட்டாய்காரப்பா) அவர்களின் மனைவி சே.முகமது அம்மாள் என்ற முகம்மது ஹமீது பீவி அவர்களுக்கும் + மேலும் நம் உறவுகளில் யாரேனும் இறந்ததிருந்தாலும் அவர்களுக்காக வேண்டி வருகிற _[பிப் 01] - ஆம் தேதி ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பின் கீழ் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்சியில் வைத்து நம் மன்றத்தின் சார்பாக காயிப் ஜனஸா தொழுகை நடத்தி நன்மைகள் சேர்த்து வைக்க நிர்வாக குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
செயலர்.
.

இறைவா! இவரின் மறுமை வாழ்க்கையை அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக !!!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteانا لله وانا اليه راجعون
ReplyDelete