சுற்றறிக்கை எண்: 01/2024
நாள் : 11-10-2024
அனுப்புநர்:–
கண்ணியத்திற்குரிய செயலர் அவர்கள்.
அல் அமின் ஜமாஅத், துபை.
ஜக்கிய அரபு அமீரகம். UAE
பெறுநர்:–
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களும்.
அல் அமின் ஜமாஅத், துபை.
ஜக்கிய அரபு அமீரகம். UAE
பொருள் :– உங்களுக்கு "'எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும்'" நம் அல் அமீன் ஜமாஅத். எனும் திட்டத்தின் கீழ் விண்ணபித்து விருதுகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சம்பந்தமாக……
அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும்!! நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்..ஆமீன்.
தாங்களும், தங்களுடைய குடும்பத்தாரும், ஈருலகிலும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்.
கண்ணியத்திற்குறிய உறவுகளே!! தற்போது இருக்கக்கூடிய நிர்வாகம் கடந்த 10/04/2024 அன்று புதிதாக நிர்வாக பொறுப்பேற்றதும் "'முத்தான மூன்று"' நலத்திட்டங்களோடு ஆரம்பித்தது. அத்திட்டத்தின் பெயராவது "'உங்களுக்கு எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும்'" நம் அல் அமீன் ஜமாஅத். என்று பெயரிட்டு துவக்கி வைத்தது.
அத்திட்டத்தின் செயல்பாடுகளாவது :-
1. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ அல்லது தனது தனித் திறமையின் மூலமாக வேறெங்கிலும் award / பதக்கம் / உயர் சான்றிதழ் போன்றவைகளை பெற்றாலோ அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை ஊக்கவிக்க & மேண்மைப்படுத்த நம் அல் அமீன் ஜமாத் “தோள் கொடுக்க” காத்துக் கொண்டிருக்கிறது.
2. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்; அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதலின் மூலமாகவும், சாந்தத்தின் மூலமாகவும், “தோள் கொடுக்கும்” நம் அல் அமின் ஜமாஅத்.
3. நமது அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்களின் எவரேனும் ஒருவரின் குடும்பத்தினருக்கு இறை அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள். என்பதாக நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால்; அன்னாருக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும். ஆறுதல் கூறி, இறை அழைப்பை ஏற்றவருக்கு ஹாயிப் ஜனாஸா தொழுகை நடத்தி அன்னாருக்கு நன்மையையும், துஆவையும் சேர்த்து வைக்க உறுதுணையாக இருக்க “தோள் கொடுக்கும்” நம் அல் அமின் ஜமாஅத். என்ற "'முத்தான மூன்று"' நலத்திட்டங்களோடு ஆரம்பித்து துவக்கி வைத்தது.
மேற்கண்ட மூன்று செயல்பாடுகளும் அமலில் இருந்த நிலையில்; இரண்டாம் பாய்ண்டும், மூன்றாம் பாய்ண்டும் அவ்வபோது செய்து வந்தோம் தற்போது முதல் பாயிண்டை நடைமுறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன…
விருதைப் பெற விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? யார்?.
1. இந்த விருதுக்கான அழைப்பை இந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதினால் 2020- ஆம் ஆண்டு முதல் 2024- ஆம் ஆண்டு வரையிலான இரண்டாம் பாயிண்டின் தகுதியினை பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.
2. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ [அல்லது] தனது தனது தனித் திறமையின் மூலமாக வேறெங்கிலும் award / பதக்கம் / உயர் சான்றிதழை பெற்றிருந்தாலோ [அல்லது] பொது சேவைகள் செய்த சான்றிதழை பெற்றிருந்தாலோ இவ்விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.
3. இந்த [2024] வருடத்திற்கான சந்தா தொகையை ஒரு மாதமும் விடுபடாமல் கண்ணியமாக செலுத்தி வருபவர் இவ்விருதினை விண்ணபிக்க தகுதியானவர் ஆவார்.
4. 4. இந்த [2024] வருடத்தில் இதுவரை நடந்துள்ள 4 “உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில்” விடுப்பு எடுக்காமல் கலந்து கொண்டவர் இவ்விருதினை விண்ணபிக்க தகுதியானவர் ஆவார்..
4. அமிரகத்தில் அல்லது தாயகத்திலும் தாங்கள் ஏதேனும் பொது சேவைகளாக செய்து அதன் மூலம் பலர் பயன்பெற்று வந்தால் இவ்விருதினை விண்ணபிக்க தகுதியானவர் ஆவார்.
விருதைப் பெற விண்ணப்பிக்கும் முறையும், விண்ணப்பிக்க கடைசி தேதியும்..
1. நீங்கள் பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்திருந்தால் அதற்குண்டான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். தாங்கள் பொது சேவைகள் செய்திருந்தால் அதற்குண்டான சான்றிதழை இணைக்க வேண்டும்.
2. தங்களது பொது சேவையின் மூலமாக பலர் பயன்பெற்று வந்தால் அதற்குண்டான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்
3. உங்களின் மூலமாக பிறர் தனிப்பட்ட முறையில் கல்வி & மஹல்லா மேம்பாடு மற்றும் உங்கள் மூலமாக பிறர் பயன் பெற்று வந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம் அதற்கு உண்டான ஆவணத்தை இணைக்க வேண்டும்.
4. இன்ஷா அல்லாஹ் 11-10-2024 இன்றிலிருந்து இந்த மாத 31-10-2024 இறுதிக்குள் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு கொடுக்கப்படுகிறது.
5. அடுத்த மாதத்தில் முதல் சனிக்கிழமை இரண்டாம் தேதி 02-11-2024 நடக்கக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் வைத்து உங்களுடைய மனுக்களை பரிசீலனை செய்து ஒப்புதல் பெறப்பட்டு [Dec 2, National Day] அன்று விருது வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
6. +971526108586 எனும் வாட்சப் நம்பருக்கு ஆவணங்களை அனுப்பி விண்ணபிக்க வேண்டும்.
7. முறைப்படி விண்ணப்பிக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்க தகுதி உடையவராவார் விண்ணப்பிக்காமல் பரிசை எதிர்பார்ப்பவர் நிச்சயம் கிடைக்காது என்ற செய்தியும் தெரியப்படுத்தப்படுகிறது.
(وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******
இப்படிக்கு:–
நிர்வாக குழு பொருப்புதாரிகள்..
அல் அமின் ஜமாஅத், துபை.
ஜக்கிய அரபு அமீரகம். UAE.
circular notice. 01word file
.

ReplyDeleteஅல்லாஹ் ﷻ தங்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் பரக்கத் செய்ய வேண்டுகிறேன். உஸ்தாத்
ameen
ReplyDelete