1️⃣.ஏற்கனவே நாம் கடந்த *உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில்* அறிவித்தது போல *பொது மன்னிப்பு* [Amnesty for UAE visa holders] திட்டவட்டமாக நீட்டிக்கப்படாது என அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள *பொது மன்னிப்பு* [Amnesty for UAE visa holders] அக்டோபர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அதற்கான தேதி நீட்டிக்கப்படாது என அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
பொது மன்னிப்பில் கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொண்டு தங்களது விசா நிலைமைகளை சரி செய்து கொள்ளுமாறு, ICP இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுல்தான் அல் நுஐமி கேட்டுக்கொண்டார்.
மேலும், பொது மன்னிப்பில் கலந்து கொண்டு நாடு திரும்புபவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மீறி இருந்தால் அவர்களுக்கு அமீரகத்துக்கு திரும்பி வர தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விசா பிரச்சனைகள் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி சரி செய்து கொள்ளுங்கள். நவம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு அமீரகத்தில் சோதனைகள் நடைபெறும் அந்த நேரத்தில் பிடிபட்டால் நீங்கள் இந்த நாட்டுக்குள் எப்போதும் வர முடியாத சூழ்நிலை ஏற்படும்".
2️⃣.அமீரகத்தில் பணி செய்யக்கூடிய அனைத்து ஊழியர்களும் தாங்களாகவே ILOE இன்சூரன்ஸ் வருட வருடம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இது தனி நபர் இன்சூரன்ஸ் ஆகும். இந்த இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் நாம் விட்டுவிட்டால் *400* திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆதலால்; உங்களுடைய இந்த *ILOE* இன்சூரன்ஸ் முடிந்து இருக்கிறதா? புதுப்பிக்க வேண்டுமா? என்பதை தாங்களாகவே https://www.diniloe.ae/nsure/login/#/login எனும் லிங்கில் நுழைந்து சுய பரிசோதனை செய்து அபராத கட்டணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது.
சிலருக்கு இந்த இன்சூரன்ஸ் கம்பெனியை செய்யும்..
சிலருக்கு அவரவர் செய்ய வேண்டியதா இருக்கும் உங்களுடைய இன்சூரன்ஸ் முடிவெடும் நிலையில் இருந்தால் உடனடியாக உங்களுடைய HR நினைவூட்டுங்கள்.
இது விஷயமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை அழையுங்கள்....
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
http://alameendubaijamath.blogspot.com/2024/10/blog-post_8.html
masha allah
ReplyDeleteMasha Allah good news
ReplyDeleteJasakallah khairan