~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: The work statement for September
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்.
தாங்கள் அனைவரும் எக்காலமும் நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்திக்கிறேன்..💐💐
✍🏻. அன்பு நிறைந்த உறவுகளுக்கு இந்த [செப்டம்பர்] மாத நமது சபையின் செயல்பாடுகளை தங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது..
1️⃣. நம் சபை சார்பாக ஐந்து மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கல்வி ஊக்கத்தொகை பெறும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தங்களுடைய பிள்ளைகளுடைய கல்வித் தரம் எவ்வாறு இருக்கிறது? என்பதைபற்றி பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. கல்வி ஊக்கத்தொகை பெறும் எல்லா மாணாக்கர்களும் இந்த காலாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார்கள் என்ற வாழ்த்துக்களோடு நம் சபைக்கு துஆவும் செய்தனர். மாஷா அல்லாஹ்.
2️⃣. 19-09-2024 அன்று நடைபெற்ற நமது அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் M. சாகுல் ஹமீது B.E [Imdaad] அவர்ககளின் திருமண விழாவில் தாயகம் சென்றிருக்கும் உறவுகள்... நம் இல்லத் திருமண விழாவில் கலந்து மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பு பரிசை கொடுத்திட ஏற்பாடு செய்யப்பட்டது.. Inviation.pdf
நம் சபையின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் தலைமையில் நம் சபையின் உறுப்பினர்களின் முன்னிலையில் நிகாஹ் அன்பளிப்பு பரிசை நம் சபை சார்பாக மணமக்களை வாழ்த்தி 💐💐 வழங்கப்பட்டது.
நம் சபையின் செயல்பாடுகளை கண்டு எல்லோரும் வாழ்த்தி வரவேற்றனர்.. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள். ஜஸாகல்லாஹ்.
3️⃣.நம் மன்றத்தின் உறுப்பினர்களிடையே தற்போது அமீரகத்தில் அறிவித்துள்ள பொது மன்னிப்பு சம்பந்தமாகவும், சலுகை காலம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...
1. UAE ஐக்கிய அரபு எமிரேட்சில் காலாவதியான Visa வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அபராதம் இல்லாமல் விசா நிலையை மாற்றவோ (Change status) இரண்டு மாத கால அவகாசத்தை அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 1, 2024 முதல் அக்டோபர் 31, 2024 வரை பிரதிபலிக்கும்.
2. விசா Expire ஆனவர்கள் "இந்த காலகட்டத்தில், தங்கள் நிலையை முறைப்படுத்தலாம் அல்லது அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்" சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது… .
4️⃣. அமீரகத்தில் இன்றுடன் [செப்டம்பர் 15, 2024] முடிவடைந்த தொழிலாளர்களுக்கான மதிய வேலை தடை!! சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஜூன் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை மதிய இடைவேளை அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் (செப்டம்பர் 15) இந்த இடைவேளை முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இடைவேளையானது, மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் வேலை செய்வதைத் தடை செய்யும். இந்த இடைவேளை அமலில் இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் ஆணையை மீறி மதிய இடைவேளையின் போது பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பணியாளருக்கும் 5,000 திர்ஹம்ஸ் அபராதம் வீதமும், பல ஊழியர்கள் பணிபுரிந்தால் 50,000 திர்ஹம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இச்சட்டம் இன்றுடன் [செப்டம்பர் 15, 2024] முடிவுக்கு வருகிறது.
5️⃣.✍🏻. அன்பு நிறைந்த உறவுகளே!! உங்களுடைய மேலான ஒத்துழைப்புகள் இருப்பதினால் நம் சபை சிறந்து விளங்குவதற்கும் மென்மேலும் சிறப்பதற்கும் பேருதவி இருக்கிறது. நம் சபை உறுப்பினர்களிடையே இருக்கும் outstanding சந்தா நிலுவையுலுள்ள பாக்கி பணத்தை இம் [அக்டோபர்] மாதம் வரை அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள பொருளாளர் அவர்களையும், மண்டல பொறுப்புதாரிகளையும், முடுக்கிவிடப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பை நல்கிட & உதவிட கேட்டுக்கொள்கிறோம்
6️⃣. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு செய்திருந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நமது கருத்துக்களை வரும் 14.09.2024 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியது அதன் அடிப்படையில் அமீரகத்தில் இருக்கும் நம் உறவுகளுக்கு இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,. சில உறுப்பினர்களுக்கு விண்ணபிக்க ஆலோசனை வழங்கி உதவி செய்யப்பட்டது….. https://waqfbill2024.com/
7️⃣. இவ்வாட்சப் குழுவில் நம் உறுப்பினர்கள் யாரேனும் இல்லையெனில் தகவல் தொடர்பு பொறுப்பாளர் : M. அப்துல் ஹமீது [பாபு] (வாசுதேவநல்லூர்) +918870747377 அவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணைய நம் சபை கேட்டுக்கொள்கிறது.
8️⃣. நமது சபையின் உறுப்பினர் வாசுதேவநல்லூர் N. மாஹின் அபூபக்கர் அவர்களின் சகோதரர் N. முஹம்மது அப்துல் ராஸிக் அவர்கள் உம்ரா பயணம் செய்துவிட்டு திரும்பியுள்ளார்கள். அபுதாபி மண்டல பொறுப்பதாரி குட்டியான் மாமா அவர்களின் தலைமையில் அங்குள்ள நமது நம் சபையின் உறுப்பினர்களின் முன்னிலையில் N. முஹம்மது அப்துல் ராஸிக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுத்தப்பட்டது. .
9️⃣. நமது சபை நம் அனைவரையும் எப்போதும் ஒரு தாய் பிள்ளைகளாகவே பார்த்து எல்லோரையும் அரவணைத்து செயல்படுவதில் முன்னுதாரனமாக திகழ்கிறது. நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றினைய வேண்டும் என்பதற்காகவே அரசு பொது விடுமுறை நாட்களிலேயே நம் உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியும் எல்லோருக்கும் தோது போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… நிகழ்சி நிரல் pdf
அன்பிற்குரிய உறவுகளே!! கடந்த செப்டம்பர் 15 - ஆம் தேதி மீலாது நாளன்று தேரா ரூமில் வைத்து நம் உறவுகள் சங்கமிப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது.
1️⃣.அதில் கடந்த மாத செயல்பாடுகள் & நடப்பு மாத செயல்பாடுகளை பற்றி சபையோரிடம் பேசி விபரிக்கப்பட்டது அதற்கு எல்லோரும் ஒப்புதல் தந்தார்கள்.
2️⃣. மண்டல பொருப்புதாரிகளை தொடர்பு கொண்டு அவர்களின் செயல்பாடுகள் மற்றும் outstanding சம்பந்தமாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) துணைச் செயலாளர் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.
3️⃣. செய்வதை திருந்தச் செய்.. பிறர் நம்மை திரும்பிப் பார்க்கும் அளவு செய்… என்பதை போல திருமண வாழ்த்து மடல் சம்பந்தமாக அதற்குரிய பொறுப்புதாரிகளான @முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்ச்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் @ மதிபிற்குறிய அருளாச்சி S. முகம்மது அலி ஜின்னா அவர்களை தொடர்பு கொண்டு விரைந்து முடிக்க துரித ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
நம் சபை பல ஆண்டுகளாக நமது சபைக்கு உட்பட்ட உறுபினர்களில் யாரேனும் நிகாஹ் முடித்தால் நிகாஹ் அன்பளிப்பு பரிசை கொடுத்து வாழ்த்தி வருகிறோம். தற்போது அந்த அன்பளிப்பு பரிசை நிறைவாக, நினைவாக, ஞாபகமாக இருக்க நம் சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட, நீண்ட நாள் நினைவு சின்னமாக இருக்கும் படியான வாழ்த்து மடலை ஏற்பாடு செய்ய..
தற்போது தாயகம் சென்று இருக்கும் நம் சபையின் முன்னாள் செயல் வீரர் ஜின்னா சாச்சா அவர்களையும், நம் சபையின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை விரைவில் முடித்துக் கொடுங்கள் என்பதாக அறிவுறுத்தப்பட்டது
4️⃣. நம் வாழ்வில் முன்னேற அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களை சந்தர்ப்ப துஆக்களோடு ஓதி நம் வாழ்வை வளம் பெறச் செய்ய வேண்டும் என்றும், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சிறக்க சந்தர்ப துஆக்களை ஓதிடுவோம். என்றும், சபையோருக்கு நினைவூட்டப்பட்டது.
கடந்த மீலாது அன்று நடந்த உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இன்று மீலாது நாளின் மூலம் நாம் அனைவரும் நபியின் சுன்னத்துகளை ஒன்று விடாமல் பின்பற்றி வாழ்வோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
5️⃣. அக்டோபர் மாத முதல் சனிக்கிழமை ஐந்தாம் தேதி - இரவு 7 மணிக்கு மேல் - ரசிதியா பூங்காவில் வைத்து உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருந்தது.
மேற்கண்ட தீர்மானித்தை நம் சபையின் எல்லோரும் ஒருமனதாக ஏற்று ஒப்புதல் தந்தது நம் அனைவருக்கும் மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
நம் அனைவரும் எப்போதும் ஓரு தாய் பிள்ளைகளாக ஒன்றினைத்து செயல்படுவோம்.. சந்தோஷத்துடன் வாழுவோம்.... பாரக்கல்லாஹ்.
💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*
0 comments:
Post a Comment