~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: The work statement for October
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்.
தாங்கள் அனைவரும் எக்காலமும் நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்திக்கிறேன்..💐💐
✍ . அன்பிற்குரிய உறவுகளே!! கடந்த 05-10-2024 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள [Rashidiya] பூங்காவில் வைத்து நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.. Everyone, thank you for your support. 🫂🫂
1️⃣.அதில் கடந்த மாத செயல்பாடுகள் & நடக்க கூடிய மாத செயல்பாடுகளை பற்றி சபையோரிடம் பேசி விபரிக்கப்பட்டது அதற்கு எல்லோரும் ஒப்புதல் தந்தார்கள். வாழ்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். மாஷா அல்லாஹ்.
2️⃣. கடந்த நான்கு முறை நடந்துள்ள உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில் இதுவரை ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.. தற்போது இதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது. ஷார்ஜா உறவுகளே உங்களையெல்லாம் தேடுது.. நீங்கதான் வரமாட்டுக்கீங்க... 😌😌😌. என்று நம் சபையோர் எல்லோரும் வருத்தப்பட்டனர்.
அடுத்த உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷார்ஜா உறவுகளில் அனைவரையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவும், ஒறுங்கிணைக்கவும் சம்பந்தமாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க @Nagoor Hanifa Dubai துணைச் செயலாளர் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது..
3️⃣. திருமண வாழ்த்து மடல் சம்பந்தமாக:- Logo [சின்னத்தில்] குர்ஆன் படம் பொறிக்கப்பட்ட, உறுவமில்லாத Logo [சின்னத்தை] விரைவில் செயலர் தயாரித்து, சபையோரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் அதற்குரிய பொறுப்புதாரிகளான நம் சபையின் முன்னாள் செயல் வீரர் ஜின்னா சாச்சா அவர்களையும், நம் சபையின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களிடம் சமர்பித்து அடுத்த திருமணம் வருவதற்கு முன்னால் விரைந்து முடிக்க துரித ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
4️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாத நடக்க இருக்கும் நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்குள் நம் உறவுகளிடையே இருக்கும் outstanding list- ஐ அறிக்கையாக சமர்பிக்க @Syed Treasurer UAE பொருளாளர், மற்றும் துணை பொருளாளர் @Raffiq Madurai Dxb அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.
5️⃣. ✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே!! நமதூர் [வாசுதேவநல்லூர்] பெரிய பள்ளிவாசலில் தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வாரமாக நமதூர் ஜமாஅத் கமிட்டி உறுப்பினர்கள் துபாயில் இருக்கக்கூடிய நம்மிடத்தில் சில உதவிகளை நாடி வந்துள்ளார்கள். இதற்கு என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? சம்பந்தமாக நமது உறவுகளிடையே மஷ்வராஹ் கேட்கப்பட்டது
ஒவ்வொருத்தரும் தாங்கள் பணி செய்யக்கூடிய இடத்தில், தங்களுக்கு தெரிந்த உறவுகளிடத்தில், இது விஷயமாக பேசி ஒவ்வொருத்தரும் பள்ளிக்காக வேண்டி உழைப்பு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி நடக்கும் நேஷனல் டே [Dec 2, National Day] அன்று வரைக்கும் சேர்த்து வைத்து மொத்த பணத்தையும் ஒன்றிணைத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு எல்லோருமே உழைப்பு செய்ய வேண்டும் எல்லோருமே உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இதற்கு பொறுப்புதாரியாக @Dubai nagooran. vk மதிப்பிற்குரிய V.நாகூரான் சாச்சா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களிடம் தங்களுடைய பங்களிப்புகளை தனிப்பட்ட முறையிலோ, குழுவாகவும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது..
நமதூர் பள்ளிக்காக வேண்டி ஒவ்வொருத்தரும் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி உதவிட கேட்டுக்கொள்கிறேன்.
6️⃣. இன்ஷா அல்லாஹ் அடுத்த நடக்க இருக்கும் [Dec 2, National Day] மீட்டிங் சம்பந்தமாக டோக்கன் முன்பதிவு அவசியம் பெற வேண்டும் என்றும், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டோக்கன் முன்பதிவு செய்ய துவங்க ஆரம்பிக்கும் என்றும், அதற்கு @Raffiq Madurai Dxb துணை பொருளாளர் ரஃபிக் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
7️⃣. தற்போது இருக்கக்கூடிய நிர்வாகம் புதிதாக பொறுப்பேற்றதும் முத்தான மூன்று நலத்திட்டங்களோடு ஆரம்பித்தது. அத்திட்டத்தின் பெயராவது உங்களுக்கு "'எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும் '" நம் அல் அமீன் ஜமாஅத்.
முழு விபரம் அறிய:- https://alameendubaijamath.blogspot.com/2024/04/blog-post.html
1. அதில் ஒரு நலத்திட்டத்தை தற்போது எதிர் வரும் [Dec 2, National Day] நேஷனல் என்று award / பதக்கம் / உயர் சான்றிதழ் கொடுப்பதற்கு முன்னெடுப்புகள் துவங்கின_
2. அதற்குரிய தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள், போன்றவைகளை செயலர் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது..
முழு விபரம் அறிய:- https://alameendubaijamath.blogspot.com/2024/10/circulaire-notice-01.html
8️⃣. நவம்பர் மாதம் முதல் சனிக்கிழமையான 2-ஆம் தேதி - மஃரிப் TO இஷாவுக்குள் - ரசிதியா பூங்காவில் வைத்து உறவுகள் சங்கமிப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் உணவு கொடுத்தவருக்கும், லெபனான் மக்களுக்கும், நம் உறவுகளிலயே இறந்தவர்களுக்கும் நன்மை பயக்க யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது. வஸ்ஸலாம்.
இந்நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது எல்லோருக்கும் பிரயோஜனமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்
மேற்கண்ட தீர்மானித்தை நம் சபையின் எல்லோரும் ஒருமனதாக ஏற்று ஒப்புதல் தந்தது நம் அனைவருக்கும் மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
2024 - அக்டோபர் மாத நமது சபையின் செயல்பாடுகள்...
✍🏻. அன்பு நிறைந்த உறவுகளுக்கு கடந்த [அக்டோபர்] மாத நமது சபையின் செயல்பாடுகளை தங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது..
1️⃣. நம் சபை சார்பாக ஐந்து மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. .
நம் சபையின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களின் தலைமையில் தலைமையில் நம் சபையின் இந்நாள் & முன்னாள் உறுப்பினர்களின் முன்னிலையில் நிகாஹ் அன்பளிப்பு பரிசை நம் சபை சார்பாக மணமக்களை வாழ்த்தி 💐💐 வழங்கப்பட்டது.
நம் சபையின் செயல்பாடுகளை கண்டு எல்லோரும் வாழ்த்தி வரவேற்றனர்.. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்துக்கள். ஜஸாகல்லாஹ்.
3️⃣.ஏற்கனவே நாம் கடந்த *உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில்* அறிவித்தது போல *பொது மன்னிப்பு* [Amnesty for UAE visa holders] திட்டவட்டமாக நீட்டிக்கப்படாது என அமீரக அரசு அறிவிப்பு..!! இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...
முழு விபரம் அறிய:- https://alameendubaijamath.blogspot.com/2024/10/blog-post_8.html
4️⃣..✍🏻. அன்பு நிறைந்த உறவுகளே!! உங்களுடைய மேலான ஒத்துழைப்புகள் இருப்பதினால் நம் சபை சிறந்து விளங்குவதற்கும் மென்மேலும் சிறப்பதற்கும் பேருதவி இருக்கிறது. நம் சபை உறுப்பினர்களிடையே இருக்கும் outstanding சந்தா நிலுவையுலுள்ள பாக்கி பணத்தை இம் [அக்டோபர்] மாதம் வரை அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள பொருளாளர் அவர்களையும், மண்டல பொறுப்புதாரிகளையும், முடுக்கிவிடப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பை நல்கிட & உதவிட கேட்டுக்கொள்கிறோம்
5️⃣. நமது அல்அமீனின் முன்னாள் தொலைத் தொடர்பு பொருப்புதாரி ஜனாப் S.செய்யது அலி பாதுஷா (ஊத்துமலை) அவர்கள் இன்று இரவு உம்ரா பயணம் செய்வதாக நம் மன்றத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் உம்ரா பயணம் சிறக்கவும், அவர்களுடைய அமல்களை லேசான முறையில் செய்யவும், அவர்களுடைய உம்ரா கபூலியத்தாகுவதற்கும் நம் சபையோர் எல்லோரும் இச்செய்தியின் மூலம் அவர்களுக்கு துஆச் செய்து கொள்கிறோம்.
நம் சபை சார்பாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழியனுப்பப்பட்டது.
6️⃣.. இவ்வாட்சப் குழுவில் நம் உறுப்பினர்களில் யாரேனும் இல்லையெனில் தகவல் தொடர்பு பொறுப்பாளர் : M. அப்துல் ஹமீது [பாபு] (வாசுதேவநல்லூர்) +918870747377 அவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணைய நம் சபை கேட்டுக்கொள்கிறது.
7️⃣ நேற்று நானும் - *உங்களை விட்டுக்கொடுக்காத அல் அமினும் பேசிக்கொண்ட போது [உரையாடல் நிகழ்வு]
அல்அமீன்:- ஏம்பா செயலாளரே!! எப்படி இருக்க? நம் சபையின் செயல்பாடுகள் எப்படி போகுது ...?
நான்:- எல்லா உறவுகளின் சிறப்பாக ஒத்துழைப்பினால் சிறப்பாக போகுது. குருநாதரே!! அல்ஹம்துலில்லாஹ்.
அல் அமீன்:- விருது விஷயமாக இதுவரை என்ன முயற்சிகள் நடந்துள்ளது?
நான்:- நம் உறவுகளில் விருது விஷயமாக யாருக்கும் தெரியவில்லை என்று சொல்லாத அளவுக்கு இடைவிடாத முயற்சிகள் நடந்துள்ளது.
அல் அமீன்:- இதுவரை எத்தனை நபர்கள் விண்ணப்பித்திருக்கின்றன??
நான்:- மூன்று நபர்கள்.
அல் அமீன்:- ஏன்? மற்றவர்கள் விண்ணப்பிக்கவில்லையா?
நான்:- எல்லோரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக வேண்டிதான் திரும்பத் திரும்ப நினைவூட்டி வருகிறேன். இன்னும் எல்லோரும் வின்னப்பிக்க அவ்வபோது ஆர்வமூட்டி வருகிறேன்.
அல் அமீன்: - என் பிள்ளைகான உறவுகளை யாரையும் விட்டு விடாதே. எல்லோரையும் அரவனைத்து செல். என் பிள்ளைகளைகாள உறவுகள் எல்லோருக்கும் பரிசு வாங்க வேண்டும் அதற்கு வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து எல்லாரையும் ஒரு தாய் பிள்ளைகளாக மகிழ வை.
நான்:- எனக்கு சிறிது கால அவகாசம் தானே இருக்கிறது என்ன செய்வேன்?.
அல் அமீன்: - உனக்கு தெரியாத வழியாப்பா? ஏதாவது வழியை காட்டிக் கொடு. எல்லாரையும் ஒரு தாய் பிள்ளைகளாக மகிழ வை.
நான்:- ஓகே குருநாதரே!! முயற்சி செய்கிறேன். இந்த நிகழ்வு அல் அமின் தொடங்கிய 22 ஆண்டுகளில் இதனை முதன் முதலில் அறிமுகப்படுத்துவதினால் சற்று தயக்கம். குருநாதரே!!
கருத்துரை:-
நமது அல் அமீன் உங்களை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கமாட்டுக்குது.. எல்லோரையும் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றிணைந்து எல்லோரையும் மகிழ வை. எல்லோரும் சந்தோஷமாக்கி வை என்று கடைசி நேரமும் உங்களுக்காக வேண்டி என்னிடம் சுபாரிசு செய்தது.
ஆதலால் தற்போது குறுகிய வாய்பு கொடுக்கப்படுகிறது அதனை பயன் படுத்திக் கொள்க...
1️⃣.விருதுக்காக விண்ணப்பிப்பவர்களும் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
2️⃣.நாளை சனிக்கிழமை 10 இஸ்லாமிய வினா விடை கேள்வி பதில் போட்டிகள் வாட்சபில் வெளியாகும் அதனை அக்டோபர் 30 செவ்வாய்க்கிழமை இரவுக்குள் பதில் அளித்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் 10 கேள்விகளுக்கு 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து மதிப்பென் பெறும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு என்ற செய்தியும் தெரியப்படுத்தப்படுகிறது. அல் அமீன் உங்களுக்காக வேண்டி சிபாரிசு செய்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது. 💐💐💐
நம் அனைவரும் எப்போதும் ஓரு தாய் பிள்ளைகளாக ஒன்றினைத்து செயல்படுவோம்.. சந்தோஷத்துடன் வாழுவோம்.... பாரக்கல்லாஹ்.
💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*





அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete