~ பிஸ்மில்லாஹ் ~
┈•••❈• ❀ ••----
Subject: நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது சம்பந்தமாக... 💐💐
இன்று நடைபெற்ற நம் மன்றத்தின் கூட்டம் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற தரமிக்கதாக இருந்தது. அனைத்து உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் முடித்தது மிகப் பெரும் மகிழ்வை தந்தது.😍😍 மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இன்னும் சிறப்புமிக்கதாக இருந்தது.
மகரிப் ஜமாத் தொழுகையோடும் & துஆவோடும் நம் சபை நிறைவுற்றது.
நான் ஓய்வாக இருக்கின்ற பொழுது இக்கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை தங்களுக்கு அதி விரைவில் தெரியப்படுத்துகிறேன்.
💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
Subject: முதல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது... 💐💐
கடந்த 07-07-2024 ஞாயிறுக்கிழமை இஸ்லாமிய புத்தாண்டு அன்று அந்திமாலை 05:30 to 07:30pm மணி அளவில் நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர் P. சேக் மியான் (வெள்ளானை கோட்டை) அவர்களின் தலைமையில் & அவர்களின் இல்லத்தில் (Bur Dubai-யில் வைத்து) நடைபெற்றது.
அதில் நமது சபையின் செயலர் மௌலானா அவர்கள் கிராஅத் ஓதி & வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்கள். செயற்குழு உறுப்பினர்களும் & நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர் தொடக்கமாக இன்றைய நாள் இஸ்லாமிய புத்தாண்டு தினமாக இருப்பதினால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறந்த வரலாறு & ஹிஜ்ரத் செய்ததின் நோக்கம் & ஹிஜ்ரி புத்தாண்டு கொண்டாடுவதனுடைய சாராம்சம் என்பதை பற்றி நமது சபையின் செயலர் மௌலானா அவர்கள் முதற்கண் சிறப்புரையாற்றினார்கள் அவர்கள் சிறப்புரை ஆற்றில் முடிந்த பிறகு அனைவரும் இந்நாளில் நோன்பு நோற்போம் என்பதாக தீர்மானம் செய்யப்பட்டது ஆக நாம் அனைவரும் இந்த சுன்னத்தான ஆஷுராவுடைய நோன்பை நோற்க முயற்சிப்போமாக.
✍🏻 அன்புள்ளவர்களே! நபி ﷺ அவர்கள் ஆஷுரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். இரண்டு நாள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும். உதாரணம் [முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11] ஒரு நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ருஹ் ஆகும்.
தமிழகத்தில் வருகிற 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை அல்லது 17/07/2024 புதன்கிழமை மற்றும் 18/07/2024 வியாழக்கிழமை.
வெளி நாட்டில் வருகிற 15/07/2024 திங்கள் கிழமை மற்றும் 16/07/2024 செவ்வாய் கிழமை அல்லது 16/07/2024 செவ்வாய் கிழமை மற்றும் 17/07/2024 புதன்கிழமை.
سُئِلَ [أي النبي صلى الله عليه وسلم]: أَيُّ الصَّلَاةِ أَفْضَلُ بَعْدَ المَكْتُوبَةِ؟ وَأَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ؟ فَقالَ: أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ المَكْتُوبَةِ الصَّلَاةُ في جَوْفِ اللَّيْلِ، وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ صِيَامُ شَهْرِ اللهِ المُحَرَّمِ
நபி ﷺ அவர்களிடம் “கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்” என்று விடையளித்தார்கள். முஸ்லிம் (2158)
Subject: இரண்டாம் & மூன்றாம் தீர்மானம் தற்போது வாசிக்கப்படுகிறது... 💐💐
மேற்கூறியவற்றின் தொடர்ச்சி....
சிறப்புரை வழங்கிய பிறகு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அடுத்ததாக . நமது சபையின் செயலர் அவர்கள் கடந்த மாத செயல்பாடுகளை பற்றி சபையின் உறுப்பினர்களிடையே விளக்கினார்கள். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அதனை ஏற்று வழிமொழிந்தார்கள் மற்றும் சிறப்பான சேவைகள் என்று பாராட்டியது நிர்வாக குழுவிற்கு மகிழ்ச்சியை தந்தது.
2️⃣. அடுத்ததாக தாயக பொறுப்புதாரியிடம் இருந்து பெறப்பட்ட கல்வி ஊக்கத் தொகை விஷயமாக இரண்டு மனுக்கள் பற்றி உறுப்பினர்களிடையே ஆலோசனை கேட்கப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் மகிழ்வோடு ஒப்புதல் தந்தார்கள்.
இதுவரை நம் மன்றத்திலிருந்து ஐந்து மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது [மதரஸா படிப்பதற்கு மூன்று நபர்களும் உலக கல்வி படிப்பதற்கு இரண்டு நபர்களும் பயன் பெற்று வருகிறார்கள்.]
3️⃣. இந்த ஐவருக்கும் கல்வி ஊக்க தொகைக்காக வேண்டி மாதா மாதம் ஒரு பெரிய தொகை அனுப்பப்பட்டு வருகிறது. ஆதலால் தங்களுடைய மீதமுள்ள சந்தாக்களை கணக்கு பார்த்து நிர்வாகிகளிடம் நேரடியாகவோ, அல்லது தங்களின் மண்டல பொறுப்புதாரிகளிடமோ காலம் தாழ்த்தாமல் கொடுத்திடுமாறும், நம் சபை மென்மேலும் வளர தங்களின் மேலான ஒத்துழைப்பு நல்கிடவும் . உங்களுடைய சந்தாக்களை கண்ணியமாக கொடுப்பதன் மூலமாக ஈருலக நன்மையை பெற்றிடுமாறும் இந்த சபை தங்களிடம் கேட்டுக் கொள்கிறது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எத்தனையோ கல்வியாளர்களை உருவாக்கிய நம் அல் அமீன் ஜமாஅத் மென்மேலும் சிறக்க உங்களுடைய மேலான ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது என்றும் மீண்டும் ஒருமுறை தங்களிடம் கேட்டுக் கொள்கிறது.
4️⃣.நீண்ட காலமாக நமது அல் அமீன் துபாய் ஜமாத்தில் இருந்து நல்ல சேவைகளை செய்து, தனது வயது மூப்பியின் காரணமாக தாயகம் செல்லும் உறுப்பினர்களுக்கு கண்ணியமான முறையில் நம் சபை சார்பாக சங்கை செய்யப்பட்டு வழி அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
0 comments:
Post a Comment