Subject: இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் நமது மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தின் அழைப்பிதழ் + நிகழ்சி நிரல் சம்பந்தமாக...
கண்ணியம் நிறைந்த அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு….
இன்ஷா அல்லாஹ் வருகிற 07-07-2024 ஞாயிறுக்கிழமை இஸ்லாமிய புத்தாண்டு அன்று அந்திமாலை 05:30 to 07:30pm மணி அளவில் நம் சபையின் பொதுக்குழு கூட்டம் நம் சபையின் தலைவர் P. சேக் மியான் (வெள்ளானை கோட்டை) அவர்களின் தலைமையில் & அவர்களின் இல்லத்தில் (Bur Dubai-யில் வைத்து) நடைபெற உள்ளது. ஆக நம் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்....
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக இதுவரை 2 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. அந்த 2 விண்ணப்பங்கள் சம்பந்தமாக ஒப்புதல் பெறவும். ஒரு சில முக்கியமான மஷ்வராக்கள் உள்ளதால் ஒரு நபரும் விடுபடாமல் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்....
குறிப்பு:-
1. மன்ற ஆலோசனை நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
2. இந்நிகழ்வில் ஷார்ஜா அபுதாபியில் வசிக்கும் உறவுகள் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். MEETING location சம்பந்தமாக தெரிந்து கொள்ள @BABU VASU @Raffiq Madurai Dxb அவர்களை தொடர்பு கொள்ளவும்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிறக்க இருக்கும் இந்த புதிய வருடத்தை; நன்மைகளும், மகிழ்ச்சியும், நிறைந்த வருடமாக ஆக்கியருள்வானாக! தீமைகளிலிருந்தும் துயரத்திலிருந்தும் பாதுகாப்பானாக. ஆமின்.. 🤲🏻🤲🏻
அல்லாஹூ சுப்ஹானஹூத்தஆலா இந்த புத்தாண்டை உங்களுக்கும் எனக்கும், இந்த முழு உம்மத்திற்கும் வெற்றிகள் பல நிறைந்த ஆண்டாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்!
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
நினைவூட்டல் செய்தி :-
✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே.... இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கும் நம் மன்ற ஆலோசனை நிகழ்ச்சி குறித்த நேரத்தில் மிகச்சரியாக அந்திமாலை 05:30 மணி அளவில் தொடங்கி 07:30pm மணி அளவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்று கூடல் விஷயத்தில் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு நிகழ்சி நிரல் உள்ளடக்கி உள்ளாதாலும், இந்த 2 மணி நேரத்தினை மிக பயனுள்ளதாக்கிடும் வகையில் full schedule போடப்பட்டுள்ளது. என்ற செய்தியை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
✍🏻 அன்பு நிறைந்த என் உறவுகளே! தங்கள் அனைவரின் மேலான 🤝 ஒத்துழைப்புடன் இருப்பதினால். நாம் ஒருபடி முன்னோக்கி செல்வதோடு சிறப்பாக செயல்பட உதவிபுரிகிறது. Alhamthulillaah.
alameen dubai jamath
https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w
♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
Join us for More Updates
🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
அல் அமீன் ஜமாஅத். துபை.
.jpg)
0 comments:
Post a Comment