வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான நல வாரியம் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
அயலகத் தமிழர் நல வாரியம்:-
தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு, செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு “அயலகத் தமிழர் நல வாரியம்” என்ற அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
நன்மைகள்:-
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு தனிப்பட்ட அடையாள அட்டை எண் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்வி, கலாச்சாரம், மாநாடு, செய்தி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்.
பதிவு செய்தவர் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 பேர்) கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவியாக ரூ.20,000/-வழங்கப்படும்.
குறைந்த சந்தாக்களில் விருப்பமான காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அட்டையை புதுப்பிப்பதன் மூலம் தற்போதைய திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்தையும் பெறலாம்.
தகுதிகள்:-
18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்களாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் பிற மாநிலங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சுற்றுலா பயணமாக சென்றவர்கள் தகுதியற்றவர்கள்.
தேவையான ஆவணங்கள்:-
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் விசா நகல் (வெளிநாடுகளில் இருப்பவர்கள்), வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள் (வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள்)
விண்ணப்பிக்கும் முறை:-
https://nrtamils.tn.gov.in - என்ற இணையதளத்தில் தகுந்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை உள்ளிட்டு அடையாள அட்டை எண் பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்.
For any more information
https://nrtamils.tn.gov.in/ta/services/nrt-welfare-board/id-card/
அயலகத் தமிழர் நலத்துறை:-
1. email address
2. Aadhaar CARD
3. PASSPORT
4. VISA
5. LABOUR CARD
மேலும் புரிதல்களுக்கு:-
: https://youtu.be/pJAbkInXAwM?si=QAXjUhQem7QJDw5q
இந் நலத்திட்டங்கள் பற்றி மேலும் விபரங்களுக்கு:-
https://chengalpattu.nic.in/ta/அயலகத்-தமிழர்-நலன்/
https://alameendubaijamath.blogspot.com/2024/04/01-2024.html
நம் அனைவரும் எப்போதும் ஓரு தாய் பிள்ளைகளாக ஒன்றினைத்து செயல்படுவோம்.. சந்தோஷத்துடன் வாழுவோம்.... பாரக்கல்லாஹ்.


.jpg)
0 comments:
Post a Comment