✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.
✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!!! கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாக அமீரகத்தில் கடுமையான மழை பெய்தது அப்போது நமது உறுப்பினர்களின் சிலர் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும், பொது சேவை செய்தது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
நம் மன்றத்தில் தன்னார்வலராக செயல்படும் ஒவ்வொருத்தரையும் இச்சபை அவர்களை வாழ்த்தி இன்னும் வாருங்கள் & வளருங்கள் என்று வரவேற்கிறது... 💐💐
தற்போது அமீரகத்தில் கடினமான வெப்ப சூழ்நிலையின் காரணமாக நமது உறவுகளில் சிலர் ஓட்டுநராக, ஹோட்டலில் மாஸ்டராக, லேபராக, வேர் ஹவுஸில், சைட்டில், மிகச் சிரமத்துடனும் பணி செய்து வருகிறார்கள். ஆக அவர்கள் தங்களுடைய சூழ்நிலைகளை கவனித்து அதிகமாக நீர் அருந்துமாறும், மோர், சர்பத், குளிர்சாதனங்களை தாங்களே தயாரித்து தங்களுடைய உடல் நிலைகளை தற்போது தற்ப வெப்ப சூழ்நிலைக்கு தகுந்தது போல் தங்களுடைய உடல் நிலைகளை பாதுகாத்து / கவனித்து கொள்ளுமாறு இத்தாய் சபை தங்களிடம் கேட்டுக்கொள்கிறது.
எல்லா வல்லமை மிக்க இறைவன் நம் அனைவரையும் இவ் வெப்பத்திலிருந்து சுகத்தையும், நாம் சம்பாதிக்க கூடிய செல்வத்தில் பரக்கத்தையும் தந்தருள் புரிவானாக!! ஆமீன் .. என்ற துஆவோடு நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்.🤲🏻🤲🏻🤲🏻
அமீரக அரசு இக் காலத்திற்கு தகுந்தார் போல் நமக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது அதனை தங்களுடைய பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்:
இவ்வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய தற்போதைய காலத்தில் அதிக அளவு நீர் பருக வேண்டும்: தாகம் இல்லை என்றாலும், தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், உப்பும் மோரும் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைப் பழச்சாறு, ORS உப்புக் கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும்.
வெளியில் வேலை செய்யக்கூடிய உறவுகள்!! குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆடை உடுத்தும் முறை: வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணிய வேண்டும்.
திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தித் துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.
தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
வெளியில் வேலை செய்யும்போது... - அடிக்கடி மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவான குளிர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும்.
மேலும், தண்ணீர் / எலுமிச்சைப் பழச்சாறு / ORS கரைசல் பருக வேண்டும்.
மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும். மிகவும் சோர்வாகவோ மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியைத் தாமதிக்காமல் நாட வேண்டும்.
கோடைக் காலத்துக்கு ஏற்ற நுங்கு, தர்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றைத் தவறாமல் உட்கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவு, கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இப்படிக்கு
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.

0 comments:
Post a Comment