Educational Welfare.

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள‌ மாணாக்கர்களை ஊக்கப்படுத்துதல் சம்பந்தமாக...

 

✍🏻. அன்பு நிறைந்த என் உறவுகளே!! நமது அல் அமின் ஜமாஅத் கல்விக்காக வேண்டியும், கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டியும், பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்பது தங்களுக்கு தெரிந்ததே...

 நேற்று நடந்த நமது மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் ஒரு முக்கிய தீர்மானம் நாளை தமிழகத்தில் வெளியாக கூடிய பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதன் பின்னர் வெளியாகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நமது சபைக்கு உட்பட்ட பிள்ளைகளில் எவரேனும் ஒருவர்

  • 1. மாநில அளவிலயோ
  • 2. மாவட்ட அளவிலயோ
  • 3. பயிலக்கூடிய பள்ளி அளவிலயோ [பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 550 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 450 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும்] 

மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பெற்றால் நம் மன்றத்தின் சார்பாக அவர்களுக்கு கண்ணியப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் யாரேனும் பரிசு பெற தகுதி பெற்றால்  உடனே நிர்வாக குழுவுக்கு தெரியப்படுத்துமாறு தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.

நமது ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 550 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும்.

 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 450 க்கு மேல் மதிப்பெண் பெற்ற வர்களும் பட்டியல் நமக்கு தேவைப்படுகிறது.

 உங்களுக்கு தெரிந்த யாரேனும் இந்த மதிப்பெணை பெற்றிருந்தால் அவர்களின் மதிப்பெண் பட்டியலோடு தனிப்பட்ட முறையில் எனக்கு +971526108586 [வாட்சப் எண்ணிற்கு மட்டும்] உடனடியாக  தெரியப்படுத்துமாறு நினைவூட்டுகிறேன்.

விண்ணப்பிக்கும் Last Date 20-06-2024

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6- ஆம் தேதி நாளை வெளியாகிறது. 

 "10-ம் வகுப்பு  தேர்வு முடிவானது மே 10-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது."

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி : 

tnresults.nic.in
dge.tn.gov.in

மேற்கண்ட இந்த இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.
Share:

1 comment:

பார்வையாளர்கள்

About