2024 - டிசம்பர் மாத நமது மன்றத்தின் செயல்பாடுகள்:-
சின்ன சின்ன துணுக்கு 8️⃣ செய்திகள்:-
1️⃣.கடந்த [Dec 2, National Day] நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த மாத உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை எங்கு வைக்கலாம்? என்று மஷ்வராஹ் கேட்கப்பட்டது. அப்போது; எல்லா உறவுகளும் ஒருமனதாக ஜனவரி மாத முதல் சனிக்கிழமையான 04-01-2025 இஷா தொழுகைக்குப் பிறகு CenterPoint Metro Sation அருகிலுள்ள [Rashidiya] பூங்காவில் வைத்து நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அந்த செய்தியும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
2️⃣.திருமண வாழ்த்து மடலில் [Logo] லோகோ பொருத்தப்படுதல் சம்பந்தமாக மதிப்பிற்குரிய துணைப் பொருளாளர் :@Raffiq Madurai Dxb M. முகம்மது ரஃபிக் (வெள்ளானை கோட்டை) அவர்களுக்கு பொறுப்பு கொடுத்திருந்தோம். அவர்கள் அதனை சிறப்பாக செய்து நமக்கு ஒரு லோகோ [Logo] தந்து இருக்கிறார்கள் அதனை வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் சபையோரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் இருக்கிறது. என்ற செய்தியும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.. 3️⃣.இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 04-01-2025 சனிக்கிழமை உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு யாரேனும் உணவு ஸ்பான்சர் செய்ய விரும்பினால் மதிப்பிற்குரிய செயலரிடம் முன்பதிவு செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்ய இறுதி தேதியாக அடுத்த வரும் 20-12-2024 வெள்ளிக்கிழமை இஷா வரைக்குள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
4️⃣.நம் சபையின் உறவுகளில் எல்லோருக்கும் சொந்தமான ஆச்சா மர்ஹுமா ஊத்துமலை குன்றப்பா அவர்கள் மனைவி சாலியம்மாச்சா அவர்களின் இறப்பு செய்தி நம் அனைவருக்கும் ஆழ்ந்த சோகத்தை தந்திருக்கிறது. அவர்களுக்காக வேண்டி நம் மன்றம்:-
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவானாக! அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நஸீபாக ஆக்குவானாக!! ஆமீன்.. என்று துஆ செய்கிறது.
அது மட்டுமல்ல; வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்களுக்காக யாசின் ஓதி துஆ செய்ய நிர்வாகக் குழு முடிவு செய்திருக்கிறது.
5️⃣.அதுபோல நம் சபையில் உள்ள உறுப்பினர்களான இருக்கும் junior ஜுனியரான உறவுகள் எப்போதும் நம் சபையின் உறவுகள் சந்திப்பு நடந்தாலும் பெரியவர்களுக்கு முக்கியத்துவமும், மரியாதையும், கொடுத்து சிறியவர்கள் volunteer-யாக செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
6️⃣.நமது ஊர்களில் தற்போது கடினமான மழை பெய்து வருவதால்; உங்களுடைய ஒவ்வொரு தொழுகையிலும் மிதமான மழை பெய்யவும், இந்த மழையினால் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு தங்களின் துஆக்களில் இணைத்துக் கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது. اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
7️⃣.இந்த 2024 - ஆம் ஆண்டில் நம் சபை சார்பாக 5 உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளளோம். அதில் ஒரு பத்து நபர்கள் இதுவரை எந்த ஒரு உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, அந்த பத்து நபர்களும் சந்தாக்களையும் கொடுக்காமல் இருக்கிறார்கள். இவர்களை என்ன செய்யலாம்? என்று செயலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதனால் வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இவர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
8️⃣.நமது உறவுகளில் சில உறவுகளின் மஷ்வராஹ்வின்படி வாசுதேவநல்லூர் பெரிய பள்ளிவாசல் கட்டுமான பணியின் வசூலுக்காக வேண்டி சிறிது அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் இன்றோடு காலாவதியான நிலையில் இதற்கு கூடுதல் பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்ட மதிப்பிற்குரிய V.நாகூரான் சாச்சா (வெள்ளானை கோட்டை) அவர்களை தொடர்பு கொண்டு நிர்வாக குழு சார்பாக பேசப்பட்டோம். அப்போது அவர்கள் இன்னும் கால அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். நான் சிலரிடம் பேசி வைத்திருக்கிறேன் எல்லாம் ஒருமித்து வந்ததும் நாம் அனுப்பி வைப்போம் என்பதாக கூறி இருக்கிறார்கள். அதனால்; இன்னும் இரண்டு வாரங்களுக்கு இக்கால அவகாசம் நீட்டித்தரப்படுகிறது. வாசு பெரிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதி கொடுக்க கூடிய நன்மை பெற்ற நல்லடியார்கள் நிர்வாக குழுவை தொடர்பு கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறது.
வாசுதேவநல்லூர் பெரிய பள்ளிவாசலுக்காக வேண்டி முன்னாலும், இந்நாளும், உதவி செய்த தங்களுடைய முழு ஒத்துழைப்பிற்கும் மிக்க கோடான கோடி நன்றிகளை நம் சபை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். 💐💐 🤝 🫂🫂🌷
வாசுதேவநல்லூர் பெரிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக old 565 + new 120 = 685 திர்ஹம் வசூலிக்கப்பட்டது.. என்ற செய்தியும் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது..
இறை இல்லத்திற்கு உதவி.. இறையன்பை பெற்றிடுவோம்....
இப்படிக்கு:-
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)
துணைச் செயலாளர்.
~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: இன்ஷா அல்லாஹ் வருகிற [ஜன 04] மாத உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை அமல்கள் நிறைந்த தினமாக ஆக்க முன்னெடுப்புகள் துவங்கின. + மேலும் சின்ன சின்ன துணுக்கு 8️⃣ செய்திகள்:-
✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் அனைவரும் நலமும், வளமும் எக்காலமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.. ஆமின்.💐💐
✍🏻.அன்பிற்குரிய உறவுகளே!! நமது மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி நம்முடைய உறவுகளையும், நம்முடைய நட்புகளையும் அவ்வப்போது புதுப்பித்து வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இன்று போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன்.
1️⃣.கடந்த இரண்டு வாரங்களில் நமது உறவுகளில் முக்கிய உறவுகளாக இருந்த நம்முடைய மூத்த உறவுகளின் இறப்பு செய்தி நம் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதனால் நாம் அனைவரும் அவர்களுக்கு நன்மைகளை சேர்த்து வைப்பதும், அவர்களுக்காக துஆ செய்வதும் நம்மீது தலையாய கடமையாக இருக்கிறது. அதற்காக வேண்டி வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியை அமல்கள் நிறைந்த தினமாக ஆக்க நிர்வாக குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
2️⃣.மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி சம்பந்தமான உறுதியான அறிவிப்பை பெற தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக காத்திருப்பில் இருக்கிறது.
தலைவரின் உறுதியான அறிவிப்பு வந்ததும் நம் சபையின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் உறுதியான அறிவிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 💐💐. இன்ஷா அல்லாஹ்..
3️⃣.இன்ஷா அல்லாஹ் [ஜன 04] வரக்கூடிய உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உணவு கொடுக்கக்கூடிய _____ அவர்களுக்கு அல்லாஹ் [ﷻ] அவருடைய எல்லா ஹலாலான ஹாஜத்துகளையும் நிறைவேற்றி நீ.........ண்ட நிம்மதியான வாழ்கையை தந்தருள்வானாக!! ஆமீன். என்று நம் சபை துஆ செய்கிறது.
4️⃣. இன்னும் ஒரு சில தினங்களில் அரையாண்டு விடுமுறை வருவதனால் இப்போதே தங்களுடைய பிள்ளைகளுடைய விடுமுறை வீணாக்காமல் நல்வழிப்படுத்த ஒரு பிளான் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
5️⃣. அன்பிற்குரிய உறவுகளே!! நேற்று நடந்த இரத்ததான முகாமில் நமது உறவுகளில் முக்கிய உறவுகள் கலந்து தங்களுடைய கொண்டு இரத்த தானம் செய்து அழிவில்லாத நன்மைகளை அள்ளி சென்று விட்டனர்கள் அவர்களுக்கு நம் சபை சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக் கொள்கிறோம். 💐🤲🏻🤲🏻💐💚🫂. மேலும் துபாய் போலீஸ் சார்பாக நற்சான்றிதழும் வழங்கப்பட்டது..
6️⃣. தற்போது குளிர் காலமாக இருப்பதினால் உறவுகள் அனைவரும் தங்களுடைய உடல் நிலைகளை சரிவர பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
7️⃣. உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் தாமதமாக வருவதினால் நம்மின் நிகழ்ச்சி நிரலே தடம் மாறி செல்கிறது ஆதலால் குறிப்பிட்ட நேரத்தில் வருவதற்கு முயற்சி செய்யுமாறு நினைவூட்டப்படுகிறது.
8️⃣. நமது உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இதுவரை 10 உறவுகள் எந்த நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களை முழுமையாக இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும், சிறப்பாக அழைத்திடவும், துணைச் செயலாளராக எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது . ஆதலால் நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்வேன்.
✅.அன்பிற்குரிய உறவுகளே!! கடந்த மூன்று மவ்த் ஆனவர்களுடைய உறவுகள் நிர்வாகத்திற்கு ஜனாஸா தொழுகை நடத்தவும், யாசின் ஓதி துஆ செய்யுமாறும் நிர்வாக குழுவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆதலால் எல்லா உறவுகளும் ஒரு உறவு கூட விடுபடாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை நிர்வாக குழு சார்பாக அழைக்கின்றோம். Everyone, thank you for your support. 🫂🫂
எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast.
இப்படிக்கு
அழைப்பின் மகிழ்வில்
M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)
துணைச் செயலாளர்..
~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽ 📚 ~
┈•••❈• ❀ ••❈•••┈┈
Subject: நன்றி நவிலல் செய்தி 🤲🏻🤲🏻
பாசத்திற்குரிய உறவுகளே!! நேற்று நடந்த நம் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி எல்லோரும் புகழ்கின்ற அளவு அமல்கள் நிறைந்ததாகவும் புத்தூயிர் பெற்ற நிகழ்வாகவும், 100 - க்கு 💯 % அதிக நன்மைகளும், பிரயோஜனங்களும், நிறைந்ததாகவும், இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அது மட்டுமல்லது; நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து ஒரு தாய் பிள்ளைகளாக சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் நடந்து கொண்ட நம்முடைய பாச போராட்டம் எல்லையில்லாத, ஈடு இணை செய்யமுடியாத அளவில் அதிக மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ். இன்று போல் என்றும் சகோதரத்துவடனும், சமத்துவதுடனும் வாழும் பாக்கியத்தை வல்லோன் நம் அனைவருக்கும் வழங்கட்டுமாக!! ஆமீன் என்று அல் அமின் துஆ செய்கிறது..
கடந்த டிசம்பர் மாதத்தில் இறந்த நம் உறவுகளுக்கு ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்தியும், குர்ஆன் ஹத்தம் செய்யும் நிகழ்வும், யாசின் ஓதி துஆ செய்யும் நிகழ்வும், மிகச் சிறப்பாக நடந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அது மட்டுமல்லது; கடந்த டிசம்பர் மாதத்தில் உம்ரா சென்று வந்த நம் உறவுகளையும் கண்ணியப்படுத்தப்பட்டது. மேலும் ஜம் ஜம் தண்ணீர் - மக்கா பேரித்தம்பழம் - Texas Chicken - இரவு உணவுகளை கொண்டு நம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எல்லா உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும், குறிப்பிடப்பட்ட நேரத்தில் கலந்து கொண்டு ஒருமித்து எல்லோரும் ஒரு கைகோர்த்து மன மகிழ்வோடு கொண்டாடியது வரலாற்றுச்சாதனை என்று கூறும் அளவிற்கு மிகப்பெரும் வெற்றியுடன் கூடிய மகிழ்வை தந்தது. மாஷா அல்லாஹ்.
இந்நிகழ்ச்சியை ஏற்படுத்திய நிர்வாகிகளுக்கும், கலந்து கொண்டு களப்பணியாற்றிய உறவுகளான உறுப்பினர்களுக்கும், உயர்தர உணவு கொடுத்த ஸ்பான்ஸர்களுக்கும் நம் சபை சார்பாக கோடான கோடி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் 💐🫂🤲🏻 தெரிவித்துக் கொள்கிறோம். பாரக்கல்லாஹ்.
இன்று நடந்த நிகழ்விற்கு ஒரு மதிப்பீடு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டால் நூற்றுக்கு 150 - மதிப்பென்னை எவ்வித குறைபாடு இன்றி கொடுப்பார்கள் என்று சொல்லும் அளவு perfect பர்ஃபெக்டாக இருந்தது.
இன்று பேசப்பட்ட தீர்மானங்களை செயல்முறை அறிக்கைகளாக நான் விரைவில் சமர்ப்பிக்கிறேன். 💐
_எப்பவும் நம்ம தான் first. எப்பவும் நம்ம தான் Fast._🫶🏻🫂💐💚
0 comments:
Post a Comment