Educational Welfare.

இன்றைய ஜுமுஆவுடைய தொழுகையில் வரலாறு கண்டிராத வயநாடு மக்களுக்காக சிறப்பாக பிரார்த்தியுங்கள் ....

 








இறைவா!

மண்னிலே புதைந்தும் 

நீரிலே மூழ்கியும் வீட்டை குடும்பத்தை இழந்து நிற்கும் எங்கள் சொந்தங்களை

"நீ" அரவணைத்திடு யா அல்லாஹ்...


இறைவா! 

சிதறிக் கிடக்கும் வீடுவாசல், பள்ளி, மதறசா, கல்விக்கூடம்,

அனைத்தையும் தந்து வயநாட்டை வளம்பெற்று செழிக்கச் செய் 

யா அல்லாஹ்.


வல்லோனே  யா அல்லாஹ்!! வயநாட்டில் இறந்த 

அனைவருக்கும் ஷஹீதின் அந்தஸ்தை வழங்கி, 

அவர்தம் பாவங்களை மன்னித்து, 

கப்ரை விசாலப்படுத்தி, 

மண்ணறையை ஒளிமயமானதாக்கி, 

இம்மையில் உயர்தரஜாவை வழங்கி, 

உயர்ந்த ஜன்னாத்துல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்திடுவானாக.. ஆமீன்...


நம் சபையும் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை கண்ணீர் மழ்க தெரிவித்துக் கொள்கிறது..

கேரளா- வயநாடு பகுதியில் நடந்துள்ள நிலச்சரிவில் இதுவரை 314-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும்  நம் சபை சார்பாக‌ அஞ்சலியைச் செலுத்துகிறோம்.  அவரதம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் அடுத்த நடைபெறும் கூட்டத்தில் வய நாடு மக்களுக்காக யாசின் ஓதி நம் சபையில் சார்பாக‌ துஆ செய்வோம்.

வயநாடு மீளும் !

        ❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷ அல்லாஹ் இன்று துபாயில் 05.08.2024 ஞாயிற்று கிழமை முஹர்ரம் பிறை 29 ஆகும். இன்ஷா அல்லாஹ் ஞாயிற்று கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் ஸபர் மாத பிறை எதிர் பார்க்கப்படுகிறது. பிறை தென்பட்டால் உடனடியாக  தெரியப்படுத்தவும். By. வாசு ஆலிம்,

        ❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About