Educational Welfare.

2024 - ஆகஸ்ட் மாத நமது சபையின் செயல்பாடுகள்...

 

 ~ 📚 பிஸ்மில்லாஹ் ﷽   📚 ~

┈•••❈• ❀ ••❈•••┈┈


Subject:  The work statement for August

✍🏻. அன்பு நிறைந்த அனைத்து உறவுகளும் நலமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ். 

தாங்கள் அனைவரும் எக்காலமும்  நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்தி பிரார்திக்கிறேன்..💐💐

✍🏻. அன்பு நிறைந்த உறவுகளுக்கு இந்த [ஆகஸ்ட்] மாத நமது சபையின் செயல்பாடுகளை தங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

அமிர‌கத்தில் இந்த மாதம் கடினமான வெப்ப சூழ்நிலை நிலவி வந்ததினால் இந்த மாதத்தில் மாதாந்திர உறவுகள் சந்திப்பு நிகழ்சி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மாதாந்திர சந்திப்பு நிகழ்வு நடைபெறாவிட்டாலும் நம் சபையின் மாதாந்திர செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதாக இந்த மாதத்தில் என்னென்ன செயல்பாடுகள் நடந்துள்ளன‌ என்பதனை தங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

1️⃣. நம் சபை சார்பாக‌ ஐந்து மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. எத்தனையோ  கல்வியாளர்களை உருவாக்கிய ந‌ம் அல் அமீன்  ஜமாஅத் மென்மேலும் சிறக்க உங்களுடைய மேலான ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது என்றும் மீண்டும் ஒருமுறை தங்களிடம் கேட்டுக் கொள்கிறது.

2️⃣. 11-08-2024 அன்று நடைபெற்ற  நமது அல்அமீன் துபை ஜமாஅத்தின் ஷார்ஜா  உறுப்பினர் அருளாட்சி A. ஹக்கிம்   பாய் அவர்களுக்கு திருமண பரிசு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

3️⃣. வயநாடு  மக்களுக்காக  நம் சபை சார்பாக இயல்பு நிலை திரும்பி இயற்கையோடு வாழ‌ யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது

4️⃣. நம் சபையின் தாயக பொறுப்புதாரி P.அப்துல் ரஹீம் ஆலிம்ஷா அவர்களுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு இருந்தது  நம் சபையின் நிர்வாக குழு வாட்சப்பின் மூலமாகவும், தாயகம் சென்றிருக்கும் உறவுகள் அலிம்ஷாவை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ஆஃபியத் பெற துஆ செய்து வந்தனர். 

5️⃣. நம் சபை பல ஆண்டுகளாக‌ நமது சபைக்கு உட்பட்ட உறுபினர்களில் யாரேனும்  நிகாஹ் முடித்தால்  நிகாஹ் அன்பளிப்பு பரிசை கொடுத்து வாழ்த்தி வருகிறோம்.  தற்போது அந்த அன்பளிப்பு பரிசை நிறைவாக, நினைவாக, ஞாபகமாக இருக்க‌ நம் சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட, நீண்ட நாள் நினைவு சின்னமாக இருக்கும் படியான‌ வாழ்த்து மடலை ஏற்பாடு செய்ய..

 தற்போது தாயகம் சென்று இருக்கும் நம் சபையின் முன்னாள் செயல் வீரர்  ஜின்னா சாச்சா அவர்களையும்,  நம் சபையின் முன்னாள் தலைவர் மவ்லானா அருளாட்சி P.முகம்மது ஷரிப் ஆலிம் அவர்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை விரைவில் முடித்துக் கொடுங்கள் என்பதாக அறிவுறுத்தப்பட்டது. 

6️⃣. தமிழக அரசு அறிவித்த அயலகத் தமிழர் நல வாரியத்தில் இம்மாதத்தோடு 15.08.2024 வரை பதிவு கட்டணம்  இல்லாமல் விண்ணபிக்கலாம் என இறுதியாக நினைவூட்டி. சில உறுப்பினர்களுக்கு விண்ணபிக்க ஆலோசனை வழங்கி உதவி செய்யப்பட்டது.....

7️⃣. இவ்வாட்சப் குழுவில் நம் உறுப்பினர்கள் யாரேனும் இல்லையெனில் தகவல் தொடர்பு பொறுப்பாளர் : M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்) அவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணைய நம் சபை கேட்டுக்கொள்கிறது.

நம் சபைக்கு அடுத்த மாதம் நடக்கக்கூடிய இரண்டு திருமணங்களுக்கு இப்போதே பத்திரிக்கை அழைப்பு நிர்வாக குழுவிற்கு வந்து இருக்கிறது அதனை ஓய்வு நேரத்தில் தங்களுக்கு அழைப்பிதழோடு தெரியப்படுத்துகிறேன்.. 

நம் அனைவரும் எப்போதும் ஓரு தாய் பிள்ளைகளாக‌ ஒன்றினைத்து செயல்படுவோம்.. சந்தோஷத்துடன் வாழுவோம்.... பாரக்கல்லாஹ்.

💐💐 I appreciate your encouragement and support. ❤️*💐💐💐*

இப்படிக்கு 
செயலர். 
அல் அமீன்  ஜமாஅத். துபை.

alameen dubai jamath YouTube's Official Channel

https://www.youtube.com/channel/UCNX_x5AaN3fOlx7t-kSJa2w

 ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ     ⌲
ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ

 Join us for More Updates

🅂🅄🄱🅂🄲🅁🄸🄱🄴 செய்து பிறருக்கும் பகிருங்கள்.





Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About