~ பிஸ்மில்லாஹ் ~
┈•••❈• ❀ ••----
Subject: RTE எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் . (Right To Education Act) சம்பந்தமாக...
✍🏻. அன்பு நிறைந்த என் உறுப்பினர்களே!! நமது அல் அமின் ஜமாஅத் கல்விக்காக வேண்டியும், கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டியும், பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்பது தங்களுக்கு தெரிந்ததே...
கடந்த 04-05-2024 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு Centerpoint Metro Sation அருகிலுள்ள [Rashidiya] பூங்காவில் வைத்து நம் சபையின் மாதாந்திரக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
அன்று நடந்த நமது மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் மற்றொரு முக்கிய தீர்மானம் RTE எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தில் நமது பிள்ளைகளை பயன்பெறச் செய்தல் சம்பந்தமாக ஆகும்.
குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் அமீரகத்தில் வசிக்கக்கூடிய நம்முடைய உறுப்பினர்களில் யாரேனும் இருந்தால் இந்த சேவையில் பயன்படுமாறு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக முழுமையாக அறிய கீழுள்ள லிங்கில் நுழைந்து பார்த்த பயனடையுமாறு கேட்கிறேன்.
https://trichyvision.com/How-do-students-apply-under-the-RTE-Right-to-Free-Education-Act
இன்னும் ஒரு சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன நான் ஓய்வாக இருக்கும் பொழுது தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் .
இன்னும் ஓரிரு வாரங்களில் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயலர்.
அல் அமீன் ஜமாஅத். துபை.
இலவச கல்வி உரிமைத் திட்டம் . (Right To Education Act)
✅✅✅✅✅✅✅✅✅✅✅
💥 இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு..
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை LKG வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பிக்கும் தேதி அரசு அறிவித்துள்ளது 22-04-2024
முதல் 18-05-2024 வரை விண்ணப்பிக்கலாம்
RTE இலவச சட்டப்படி LKG வகுப்பில் மாணவ மாணவிகளை சேர்க்க ஒரு அரிய வாய்ப்பாக கருதி பெற்றோர்கள் உடனடியாக தங்கள் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
தேவையான ஆவணங்கள் :
- குழந்தையின் புகைப்படம்
- குழந்தையின் ஆதார் கார்டு
- (ஆதார் இல்லையென்றாலும் சேர்க்க முடியும்)
- வருமான சான்றிதழ்
- வகுப்பு சான்றிதழ் ( இல்லையென்றாலும் சேர்க்க முடியும்)
- இருப்பிட சான்றிதழ் அல்லது முகவரி சான்றிதழ் (இவை இல்லையென்றால் குழந்தையின் ஆதார் கார்டு/ குழந்தை பெயர் உள்ள ரேஷன் கார்டு போதும்)
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
- பெற்றொர்களின் (ஒருவரின்) ஆதார்கார்டு
RTE ன் படி இலவச கல்விக்கு விண்ணப்பிக்க அணுக வேண்டிய முகவரி

0 comments:
Post a Comment