Educational Welfare.

சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 19 இந்தியர்கள் வபாஅத் ஆகிவிட்டார்கள்


உலகம் முழுவதும் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 223 விமானங்களில் 61,847 பேர் அங்கு சென்றுள்ளனர
அவர்களில் 27,487 பேர் மெக்காவுக்கும், 34,345 பேர் மதீனாவுக்கும் புனித யாத்திரையாக சென்றுள்ளனர். இவர்களில் 19 பேர் இறந்து விட்டனர்.
இவர்களில் 15 பேர் ஹஜ் கமிட்டி சார்பிலும், 4 பேர் தனியார் மூலமாகவும் வந்தவர்கள். இந்த தகவலை ஜித்தாவில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து 20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும், கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் ஹஜ் புனிதபயணம் மேற்க்கொள்ள சவுதி அரேபியா சென்றுள்ளனர்.





NewIndiaNews
Share:

0 comments:

Post a Comment

பார்வையாளர்கள்

About