உங்களுக்கு "'எப்போதும் தோள் கொடுக்க தயாராக இருக்கும்'" நம் அல் அமீன் ஜமாஅத்.

 கண்ணியம் நிறைந்த  அல் அமீன் துபை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 

தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நமது அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழு நாம் அனைவரும் மேம்பட & நம் அனைவரையும் ஒன்றிணைக்க ஒவ்வொரு நொடிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். 


அதன் அடிப்படையில் நமது அல் அமீன் ஜமாஅத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை திட்டங்களை புதிய உறுப்பினர்களுக்கு நினைவூட்டு முகமாகவும் & அனைவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் முகமாக கிழ்காணும் விஷயங்களை தெரிவிக்கப்படுகிறது.


1. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் தற்போது பணி செய்யும் இடத்தில் உயர் பதவி அடைந்தாலோ அல்லது தனது தனி திறமையின் மூலம் award /  பதக்கம் /  உயர் சான்றிதழ் போன்றவைகளை பெற்றாலோ அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை ஊக்கவிக்க & மேண்மைப்படுத்த நம் அல் அமீன் ஜமாத் தோள் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.

2. நமது அல் அமீன் ஜமாஅத் உறுப்பினர்களில் எவரேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்;  அவர்கள் நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால் அவருக்கு; அவரை நேரில் சென்று ஆறுதலின் மூலமாகவும், சாந்தத்தின் மூலமாகவும் ,  தோள் கொடுக்கும்  நம் அல் அமின்  ஜமாஅத்

3. நமது அல் அமீன் ஜமாஅத்தின் உறுப்பினர்களின் எவரேனும் ஒருவரின் குடும்பத்தினருக்கு இறை அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள். என்பதாக நம் அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழுவிற்கு தெரியப்படுத்தினால்; அன்னாருக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும்.  ஆறுதல் கூறி, இறை அழைப்பை ஏற்றவருக்கு ஹாயிப் ஜனாஸா தொழுகை நடத்தி அன்னாருக்கு நன்மையையும், துஆவையும் சேர்த்து வைக்க உறுதுணையாக இருக்க‌ தோள் கொடுக்கும்  நம் அல் அமின்  ஜமாஅத்

4. இது போன்ற நம் மன்ற செயல்பாடுகளை இன்னும் துரிதப்படுத்த உங்கள் அனைவருடைய  ஒத்துழைப்பும் & ஆதரவும் தேவைப்படுகிறது. தங்களின் மேலான சந்தாக்களை ஒரு மாதமும் விடுபடாமல் கொடுத்து இது போன்ற நலத்திட்டங்களை மேன்மைப்படுத்த ஒத்துழைக்குமாறு நிர்வாக குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வஸ்ஸலாம்.

.

இப்படிக்கு 

நிர்வாக குழு 

அல் அமீன்  ஜமாத். துபை  

No comments:

Post a Comment