அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22- ஆம் ஆண்டு துவக்க விழாவும்.. நிர்வாகிகள் தேர்வும்....

 அன்பிற்குறிய அல் அமீன் துபை ஜமாஅத்தின் நிர்வாகிகள் & உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

Download PDF.  

துபை அல் அமீன் ஜமாஅத்தின் நிர்வாக குழு. 2024- pdf.

عيد مبــــــــــــــــــــارك✨🌙

تقبل الله منا ومنكم صالح الأعمال

அல் அமீன் துபை ஜமாஅத்தின் 22- ஆம் ஆண்டு துவக்கவிழா  10/04/2024 புதன் கிழமை காலை 11.00 மணி அளவில்  துபை [Mamzer] மம்ஸார் பார்க்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பரவலாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இச்சபை கூட்டத்திற்க்கு  விழாவின் தலைவராக மதிபிற்குறிய அருளாச்சி S.ஜலாலுதீன் அவர்கள் பொறுப்பேற்க்க  மதிபிற்குறிய  அருளாச்சி S.முகம்மது அலி ஜின்னா அவர்கள் அதனை வழி மொழிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து மவ்லானா S.முஹ்யித்தின் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி இச்சபையை இனிதே துவங்கி வைத்தார்கள்..

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது அதில் கீழ் காணும் நபர்கள் நம் சபையின் பொறுப்புதாரிகளாக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தலைவர் : P. சேக் மியான்  (வெள்ளானை கோட்டை)  

துனைத் தலைவர்M. சேகு அப்துல் காதர் [சேக்கா மாமா] (ஊத்துமலை)  

செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)  

துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி) 

பொருளாளர்  :  M. செய்யது மலுக்கு மேத்தா (வெள்ளானை கோட்டை) 

துனைப் பொருளாளர் : M.ரஃபிக் (வெள்ளானை கோட்டை) 

தொலைத் தொடர்பு தகவல‌ர் : M.அப்துல் ஹமீது [பாபு]  (வாசுதேவநல்லூர்)

செயற்குழு உறுப்பினர்கள் : D.சேக்மைதீன் (ஊத்துமலை), காதர் ஓலி  (மேல மருதப்புரம்) M. இப்ராஹிம் [RTA] சங்கரன் கோவில். S. மேத்தப்பிள்ளை [எ] மேத்தர் (மேல மருதப்புரம்) ஆகீயோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்ததாக நமது சபையின் உறுப்பினர்  S. செய்யது இப்ராஹிம் (வாசுதேவநல்லூர்) அவர்கள் தனக்கு நிக்காஹ் இருப்பதாகவும், நம் சபையினர் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டும் என்றும்,   நம் சபையின் தலைவரிடத்தில் பத்திரிக்கையை கொடுத்து வேண்டிக் கொண்டார். நம் சபையினர் அனைவரும் அவரது திருமண வாழ்வு சிறக்க வாழ்த்தி பிராதித்தனர். بَارَكَ اللَّهُ لَكَ، وبَارَكَ عَلَيْكَ، وجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ


syed ibrahim invitation letter .pdf


 அடுத்ததாக வாட்சப் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தொலைத் தொடர்பு தகவல‌ர் : M. அப்துல் ஹமீது (வாசுதேவநல்லூர்) அவர்களையும், அட்மின்  N.மாஹின் அபுபக்கர் (வாசுதேவநல்லூர்) அவர்களையும் தொடர்பு கொள்ளுமாறு நினைவூட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–.

  • நம் மன்றத்தில் இவாண்டில் மொத்த எத்தனை உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள் என்பதனை உறுதி செய்யவும், அவர்கள் அனைவரையும் மாதந்திர சங்க கூட்டங்களின் ஒன்றிணைக்க முறையான அழைப்பிதழ்களை கால் செய்தும் & இமெயில் முகவரிக்கும் & வாட்சப்பில் அனுப்புவதின்  மூலம் முறையான அழைப்பிதலோடு அழைப்பு கொடுக்க வேண்டும்  என முடிவு செய்யப்பட்டது.
  • நம் மன்றத்தின் உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அவர் தலைவரிடமுமோ, செயலாளரிடமுமோ, ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே முன்னிறுத்தினால் ஹாயிபு ஜனாஸா தொழுகை நடத்த வழிவகை செய்யப்படும்.
  • நம் மன்றத்தின் அடுத்த மாதாந்திர கூட்டம் அனைத்து உறுப்பின‌ர்களிடமும் ஆலோசனை கேட்டு பின்னர் அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
  • நாளை நமதூரில் ஈத் பெருநாள் கொண்டாடும் நமது சங்க உறுப்பினர்களுக்கும், நம் உறவினர்  அனைவருக்கும் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள் நமது சபை தெரிவித்துக் கொள்கிறது. عيد مبــــــــــــــــــــارك
  • تقبل الله منا ومنكم صالح الأعمال.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நன்றியுரையை நமது சபையின் துனைச் செயளாளர் : M. நாகூர் ஹனிஃபா (சோலைசேரி)  அவர்கள் வழங்கினார்கள். பின்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது.  அஸர் ஜமாத் தொழுகைக்குப்பின் செயலாளர் : மவ்லானா S. முஹ்யித்தீன் (வாசுதேவநல்லூர்)   ஆலிம் அவர்களின் துஃஆவுடன்  இச்சபை கூட்டம்  இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

ஈத் பெருநாள் சிறப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 உங்கள் ஆதரவிற்க்கும்,  ஒத்துழைப்பிற்கும் நன்றியையும்,  நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது நம் சபை.

جزاك الله خيرا كثيرا في الدارين يا أستاذي الكريم

Thanks! 

I've invited you to fill out a form:

அல் அமீன் துபை ஜமாஅத் 2024 - ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு சிறப்பு முகாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆதலால் கீழ்காணும் லிங்கில் உள்நுழைந்து தங்களுடைய சுய விபரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்கிறோம். இவற்றினை பதிந்து இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://forms.gle/9R43CxqEKDD4ox1w6

No comments:

Post a Comment